Home Uncategorized குரூப் 2: விண்ணப்பிக்க அடுத்த மாதம் 13ஆம் தேதி கடைசி நாள்!

குரூப் 2: விண்ணப்பிக்க அடுத்த மாதம் 13ஆம் தேதி கடைசி நாள்!

குரூப் 2 தேர்விற்கு விண்ணப்பிக்க அடுத்த மாதம் 13ஆம் தேதி கடைசி நாள். குரூப் 2 பிரிவுகளில் 645 காலி பணியிடங்கள் இருப்பதாக டிஎன்பிஎஸ்சி தகவல் தெரிவித்துள்னர்.

645 குரூப் 2 பணியிடங்களுக்கு அடுத்த மாதம் ஆகஸ்ட் 13ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. குரூப் 2A  பணியிடங்கள் உதவி ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், நன்னடத்தை அலுவலர், சார் பதிவாளர், நிலை இரண்டு தனிப்பிரிவு உதவியாளர், உதவி பிரிவு அலுவலர், வனவர் ஆகிய குரூப் 2 பதவிகளில் 50 பணியிடங்களும், முதுநிலை ஆய்வாளர், உதவி ஆய்வாளர், தணிக்கை ஆய்வாளர், மேற்பார்வையாளர், உதவியாளர் நிலை 3, உதவியாளர், முதுநிலை வருவாய் ஆய்வாளர், செயல் அலுவலர் நிலை 3,  ஆகிய குரூப் 2A  பதிவைகளில் 595 இடங்களும் என மொத்தம் 645 இடங்கள் தமிழ்நாடு அரசு துறைகளில் காலியாக இருப்பதாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

 இந்த பணியிடங்களுக்கு WWW.tnpscexams.in என்ற இணையதளம் வாயிலாக அடுத்த மாதம் ஆகஸ்ட் 13ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். திருத்தங்கள் மேற்கொள்ள ஆகஸ்ட் 18ம் தேதி முதல் 20ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது. விண்ணப்பித்தவர்களுக்கான முதல் நிலை தேர்வு செப்டம்பர் மாதம் 28ஆம் தேதி காலை 9:30 மணி முதல் பிற்பகல் 12 30 மணி வரை நடைபெற இருக்கிறது.

முதல் நிலை தேர்வு பொருத்தவரையில் 300 மதிப்பெண்களுக்கு கொள் குறி வகை வினாக்களாக கேட்கப்படும். இந்த தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் அடுத்தகட்டமாக முதன்மை தேர்வு எதிர்கொள்ள வேண்டும். தேர்வர்களின் நலன் கருதி குரூப் 2A பணிகளுக்கான தேர்வு திட்டம் மாற்றி அமைக்கப்பட்டு இருப்பதாகவும் 2018 முதல் 2025 வரை 8 ஆண்டுகளில் தொடர்ச்சியாக அடுத்த அடுத்த ஆண்டுகளில் அதாவது 2024,2025 ஆம் ஆண்டுகளில் குரூப் 2A பணிகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளதாகவும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

 மேலும் இந்த தேர்வு மூலம் இந்த ஆண்டுக்கான அட்டவணையின் படி தேர்வு அறிவிப்புகளும் அனைத்தும் வெளியிடப்பட்டு விட்டதாகவும் தொடர்ச்சியாக 13வது முறையாக தேர்வாணையத்தின் ஆண்டு திட்டத்தில் குறிப்பிட்ட தேதியில் தேர்வுக்கான அறிவிப்புகள் தவறாமல் வெளியிடப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

Exit mobile version