Home Uncategorized பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து.. இழுத்துச்செல்லப்பட்ட வேன்.. மூன்று பேர் உயிரிழப்பு.. அதிர்ச்சி!

பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து.. இழுத்துச்செல்லப்பட்ட வேன்.. மூன்று பேர் உயிரிழப்பு.. அதிர்ச்சி!

கடலூர் அருகே செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். இது குறித்து விசாரணை மேற்கொண்டதில் கேட்கீப்பர் தூங்கியதால் இந்த விபத்து நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரயில் வரும் நேரத்தில் கேட்டை மூடாததால் பள்ளி வாகனம்  ரயில் தண்டவாளத்தை கடக்க முயற்சிக்கும் போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

 ஆனால், இந்த தகவலை ரயில்வே துறை மறுத்துள்ளது. அப்போது அடுத்த கட்ட விசாரணை நடந்து கொண்டிருக்கின்றது. விபத்தை நேரில் பார்த்தவர்கள் அங்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர், பிறகு ஆம்புலன்ஸ்க்கும் தகவல் கொடுத்துள்ளனர். ரயில் மோதியதில் பள்ளி வேன் 50 மீட்டர் தொலைவுக்கு தூக்கி வீசப்பட்டு சுக்குநூறாக உருக்குலைந்து கிடந்துள்ளது.

 இந்த கோர விபத்தில் கேட்டின் அருகே நின்று கொண்டிருந்த அண்ணாதுரை என்பவர் மின்சாரம் தாக்கி இறந்துள்ளார். மேலும் நிவாஸ் மற்றும் சாருமதி ஆகிய மாணவர்களும் பலியாகியுள்ளனர். மொத்தம் ஐந்து மாணவர்களே பள்ளி வேனில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. காயமடைந்த மற்ற பள்ளி மாணவர்கள் கடலூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இந்த விபத்து குறித்து தண்டவாளத்தை ஆய்வு செய்ய வேண்டி உள்ளதால் அந்த வழியாக செல்ல வேண்டிய ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளது.

தெற்கு ரயில்வே அளித்த விளக்கத்தில், இன்று காலை சுமார் 07.45 மணியளவில் விபத்து நிகழ்ந்துள்ளது. மேலும், கேட் கீப்பர் கேட்டை மூடத் தொடங்கிய போது வேன் ஓட்டுநர் வேனை வேகமாக இயக்கியதால் விபத்து நடந்துள்ளது. சம்பந்தப்பட்ட ரயில்வே கேட் இன்டர்லாக் செய்யப்படாத கேட் எனவும், கேட் கீப்பர் முறையாக மேனுவலாக கேட்டை மூட முயற்சித்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version