Wednesday, July 8, 2026
Homeஉலகம்ஈரானுடன் இனி எந்த ஒப்பந்தமும் இல்லை... ட்ரம்ப் திட்டவட்ட அறிவிப்பு!

ஈரானுடன் இனி எந்த ஒப்பந்தமும் இல்லை… ட்ரம்ப் திட்டவட்ட அறிவிப்பு!

துருக்கியின் அங்காராவில் நடைபெற்று வரும் நேட்டோ (NATO) மாநாட்டின் இடையே செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப, ஈரானுடனான இடைக்காலப் புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) மற்றும் போர்நிறுத்தம் ஆகியவை தமக்கு இத்துடன் முடிவுக்கு வந்துவிட்டதாக அதிரடியாக அறிவித்துள்ளார்.

ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் சர்வதேச வர்த்தகக் கப்பல்கள் மீது ஈரான் நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாக, அந்நாட்டின் 80-க்கும் மேற்பட்ட ராணுவ இலக்குகள் மீது அமெரிக்கப் படைகள் வான்வழித் தாக்குதல்களை நடத்திய சில மணி நேரங்களிலேயே ட்ரம்பின் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.

ஈரானியத் தலைவர்களைக் கடுமையாகச் சாடிய ட்ரம்ப், ஈரானுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவது என்பது முற்றிலும் வீணான காரியம் என்றும், இனிமேல் அவர்களுடன் எந்தவொரு உடன்பாடும் வைத்துக்கொள்ளத் தாம் விரும்பவில்லை என்றும் திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments