Home செய்திகள் H-1B விசா கட்டண உயர்வு! தலையில் இடியை இறக்கிய டிரம்ப்!

H-1B விசா கட்டண உயர்வு! தலையில் இடியை இறக்கிய டிரம்ப்!

அமெரிக்காவில் வாழ்ந்து வரும் இந்தியர்கள் பெரும்பாலும் H-1B விசாவை தான் வைத்திருக்கிறார்கள். ஆனால் தற்போது இந்த விசாவுக்கான கட்டணத்தை ரூ.88 லட்சமாக ட்ரம்ப் உயர்த்திருப்பது இந்தியர்களின் வாழ்க்கையில் பெரிய இடியாக இறங்கியுள்ளது. இந்த கட்டண உயர்வு அமெரிக்காவில்H-1B விசாவை வைத்திருக்கும் 3.5 லட்சம் இந்தியர்களையும் புதியதாக அமெரிக்காவுக்கு வேலைக்கு போக விரும்பும் இந்தியர்களையும் கடுமையாக பாதிக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

 H-1B விசா என்பது தற்காலிகமாக அமெரிக்காவில் வேலை செய்வதற்கான விசாவாகும். இந்த விசாவை வைத்துக் கொண்டால் அமெரிக்காவில் தற்காலிகமாக வேலை பார்க்க முடியும். மூன்று ஆண்டுகளுக்கு மட்டும் இந்த விசா செல்லும். அதிகபட்சம் இந்த விசாவை ஆறு ஆண்டுகள் வரை நீடித்துக் கொள்ளலாம். அதன் பின்னர் புதுப்பிக்க வேண்டும்.

 தற்போது அமெரிக்காவில் இந்த விசா மூலம் சுமார் 5 லட்சம் பேர் தங்கி வேலை செய்து வருகிறார்கள். இவர்களில் 71% அதாவது 3.5 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் இந்தியர்கள் ஆவர். அதுமட்டுமில்லாமல் மூன்று முதல் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக அமெரிக்காவில் வசித்து வரும் இந்தியர்கள் பலரும் நிரந்தர குடியுரிமைக்காக விண்ணப்பித்திருக்கிறார்கள் ஆனால் குடியுரிமை இதுவரை கிடைக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்படி ஒரு பக்கம் சூழ்நிலை இருக்க திடீரென விசா கட்டணத்தை ரூ.8.8 லட்சத்திலிருந்து ரூ. 88 லட்சமாக உயர்த்தி அறிவித்திருப்பது அமெரிக்காவில் வாழும் இந்தியர்களுக்கு மட்டுமில்லாமல் அமெரிக்காவுக்கு புதியதாக வேலை பார்க்க போகும் இந்தியர்களுக்கும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அமெரிக்க நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருந்து ஊழியர்களை தேர்ந்தெடுத்து வேலை கொடுப்பதற்கு இரண்டு காரணங்கள் உள்ளது.

 அமெரிக்காவில் வேலை என்னாலே பிரமாண்டமாக நினைத்து இருக்கும் இந்தியர்களும், மற்ற நாடுகளைச் சேர்ந்த ஊழியர்கள் குறைவான ஊதியம் என்றாலும் வேலை பார்க்க தயாராக இருப்பார்கள். ஆனால் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் குறைவான ஊதியத்திற்கு வேலை செய்ய மாட்டார்கள். அது மட்டும் இல்லாமல் குறிப்பிட்ட நேரம் மட்டும்தான் வேலை செய்வார்கள். சட்டம் பேசுவார்கள். என்பதற்காகவே கார்ப்பரேட் கம்பெனிக்காரர்கள் சொந்த ஊரிலிருந்து ஆட்களை வேலைக்கு எடுப்பதற்கு தயங்குவார்கள்.

 அது மட்டும் இல்லாமல் தங்கள் உள்நாட்டில் இருந்தே தொழிலாளர்களை வேலைக்குச் சேர்த்தால் தொழிலாளர்கள் உரிமை தொடர்பான அனைத்து சட்ட திட்டங்களையும் நிறைவேற்ற வேண்டியிருக்கும் என்பதற்காகவே அவர்கள் வெளிநாட்டில் இருந்து ஆட்களை வேலைக்கு சேர்ப்பார்கள். அதிக அளவில் லாப நோக்கத்துடன் தான் அமெரிக்காவில் இருக்கும் நிறுவனங்கள் வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு தேர்ந்தெடுக்கிறார்கள்.

 இந்த சூழ்நிலை அதிகமாகி கொண்டே இருக்கும் சமயத்தில் அமெரிக்காவில் வாழும் உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்புகள் குறைவதாகவும், தங்களுக்கும் வேலை வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கும் நிலையில்,  அவர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளும் விதமாக டிரம்ப் தலைமையிலாயின அரசு இந்த விசா கட்டணத்தை உயர்த்திருப்பதாக தெரிவித்து இருக்கிறது. இதன் மூலம் வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவில் வந்த வேலை செய்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறையும் என்றும் நம்புகின்றனர். 

அமெரிக்க குடியரசு கொள்கையை மறுசீரமைக்கும் எண்ணத்தில் இந்த கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது என்று ட்ரம்ப் தரப்பில் இருந்து கூறுகின்றனர். நேற்று வெள்ளை மாளிகையில் நடந்த நிகழ்வில் இதற்கு தொடர்பான உத்தரவுகளுக்கு கையெழுத்துட்டுள்ளார் என்ற தகவல் வந்ததும், இந்தியர்களுக்கு பெரிய இடியாகவே இயங்கி உள்ளது.

 இது குறித்து வெள்ளை மாளிகை ஊழியர் செயலாளர் கூறுகையில்,””H-1B விசா என்பது அமெரிக்க மக்களால் செய்ய முடியாத வேலையை செய்யும் நபர்களுக்காக உருவாக்கப்பட்டதுதான். நமக்கு சிறந்த தொழிலாளர்கள் தேவை. அந்த வகையில் தற்போது மாற்றி அமைக்கப்பட்டிருக்கும் விசா கட்டணம், சிறந்த தொழிலாளர்கள் மட்டுமே நமக்கு கிடைப்பதை உறுதி செய்யும்” என்று கூறியிருக்கிறார்.

இந்த கட்டண உயர்வு அமெரிக்காவில் H-1B விசாவை வைத்திருக்கும் 3.5 லட்சம் இந்தியர்களையும், புதியதாக அமெரிக்காவுக்கு வேலைக்கு போக விரும்பும் இந்தியர்களையும் கடுமையாக பாதிக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. 

Exit mobile version