மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், ஈரானின் முக்கிய எண்ணெய் முனையமான கார்க் தீவில் (Kharg Island) உள்ள ராணுவ இலக்குகளை அமெரிக்கப் படைகள் குண்டுவீசி அழித்துள்ளதாக அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார்.
தனது ‘ட்ரூத் சோஷியல்’ (Truth Social) தளத்தில் இது தொடர்பான வீடியோ மற்றும் தகவல்களைப் பகிர்ந்துள்ள அவர், மத்திய கிழக்கு நாடுகளின் வரலாற்றிலேயே மிக சக்திவாய்ந்த தாக்குதல்களில் ஒன்றாக இது நடத்தப்பட்டதாகவும், கார்க் தீவில் இருந்த அனைத்து ராணுவ கட்டமைப்புகளும் முற்றிலும் நிர்மூலமாக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், மனிதாபிமான அடிப்படையில் அங்குள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது தற்போது தாக்குதல் நடத்தவில்லை என்றும், ஹார்முஸ் ஜலசந்தியில் (Strait of Hormuz) கப்பல் போக்குவரத்திற்கு ஈரான் இடைஞ்சல் கொடுத்தால் அடுத்தகட்டமாக எண்ணெய் முனையங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

