தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் (TNHB) புதிய தலைவராகத் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வடசென்னை மாவட்டச் செயலாளரான ‘பெரம்பூர்’ வி. சிவா நியமிக்கப்பட்டுள்ளார்.
நடைபெற்று முடிந்த சட்டசபை தேர்தலின் போது, பெரம்பூர் தொகுதியைத் தவெக தலைவர் விஜய்க்காக விட்டுக்கொடுத்து, அவரது வெற்றிக்காகக் களத்தில் இறங்கித் தீவிரமாகப் பணியாற்றிய இவரை, வீட்டுவசதி வாரியத்தின் தலைவராக நியமித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
கட்சிப் பணிகளிலும் மக்கள் நலச் செயல்பாடுகளிலும் அர்ப்பணிப்புடன் இயங்கி வரும் இவர், விரைவில் முறைப்படி பொறுப்பேற்று எளிய மற்றும் நடுத்தர மக்களின் சொந்த வீடு கனவை நனவாக்கும் புதிய குடியிருப்புத் திட்டங்களைச் செயல்படுத்துவதிலும் வாரியத்தின் பணிகளை விரைவுபடுத்துவதிலும் தீவிர கவனம் செலுத்தவுள்ளார்.

