Home செய்திகள் மெரினா முற்றுகைக்கு தயாராகும் தவெக தொண்டர்கள்? சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு!

மெரினா முற்றுகைக்கு தயாராகும் தவெக தொண்டர்கள்? சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு!

தமிழகத்தில் ஆட்சி அமைப்பதற்கான இழுபறி நீடித்து வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை ஆட்சி அமைக்க ஆளுநர் உடனடியாக அழைக்க வேண்டும் என வலியுறுத்தி, அக்கட்சியின் தொண்டர்கள் மெரினா கடற்கரையில் திரண்டு போராட்டம் நடத்தக்கூடும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மெரினா கடற்கரைக்குச் செல்லும் அனைத்து முக்கியச் சாலைகளிலும் காவல்துறையினர் தடுப்புகளை (Barricades) அமைத்துக் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

108 இடங்களை வென்றும் ஆட்சி அமைப்பதில் நிலவும் சட்டச் சிக்கல்கள் தொண்டர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள சூழலில், எவ்வித அசம்பாவிதங்களும் நடைபெறாமல் தடுக்க மெரினா முதல் ஆளுநர் மாளிகை வரை பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ஏற்கனவே நீலாங்கரையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது சென்னையின் அடையாளமான மெரினாவிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளதால் அந்தப் பகுதி முழுவதும் பெரும் பரபரப்புடன் காணப்படுகிறது.

Exit mobile version