தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான சோசப் விசய், மகாராஷ்டிர மாநிலம் ஷீரடியில் உள்ள புகழ்பெற்ற சாய் பாபா கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
“உன்னையே எனக்கு அர்ப்பணித்தேன்” எனச் சரணடையும் பக்தர்களுக்கு அள்ளிக் கொடுக்கும் கற்பகவிருட்சமாகத் திகழும் ஷீரடி சாய் பாபாவின் சன்னதியில், விசய் அமைதியான முறையில் வழிபாடு நடத்தி ஆசி பெற்றார்.

அண்மைக்காலமாக ஆன்மீகப் பயணங்களில் ஆர்வம் காட்டி வரும் அவர், அங்கே பாபாவின் பாதங்களை வணங்கிச் சிறப்புப் பிரார்த்தனை செய்துள்ளார்.
சாய் பாபாவின் மகிமையும் அருளும் அனைவரையும் காக்கட்டும் என்ற வேண்டுதலோடு, விஜய்யின் இந்தத் திடீர் ஷீரடி பயணம் அவரது ரசிகர்களிடையே பெரும் நெகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


