Saturday, March 21, 2026
HomeUncategorizedஉலகத்திற்கு ஒளி கிடைத்த நாள் இன்று.

உலகத்திற்கு ஒளி கிடைத்த நாள் இன்று.

இதே – டிசம்பர் 31 ,1879, ஒளிவிளக்கு அறிமுகம் உலகத்திற்கு ஒளி கிடைத்த நாள் இன்று. ஆம். 1879 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி தான் முதல் ஒளிவிளக்கு உலகிற்கு அறிமுகப்படுத்தப் பட்டது.

1847 ஆம் ஆண்டு பிப்ரவரி 11ல் அமெரிக்காவில் பிறந்த தாமஸ் ஆல்வா எடிசன் உலகிற்கே வெளிச்சம் கொடுத்தார்.

இவர் மின் விளக்கு மட்டுமல்லாமல், போனோகிராப், டெலிபிரின்டர், பேட்டரி, சிமென்ட், நிலக்கரி, கேமரா, ஒலி நாடா உள்ளிட்ட ஏராளமான கண்டுபிடிப்புகளை உருவாக்கினார். 18 ஆம் நூற்றாண்டில் வாயு விளக்குகளே பயன்பாட்டில் இருந்த காலத்தில், மின் விளக்கு கண்டுபிடிப்பது பலரது கனவாகவே இருந்தது.

1879ல் பிளாட்டினம் கம்பிச்சுருளை, வெற்றிட பல்ப் ஒன்றில் பயன் படுத்தி கட்டுப்படுத்திய மின்னோட்டத்தில் , உலகின் முதல் மின்விளக்கை உட்டன் என்பவருடன் சேர்ந்து எடிசன் கண்டுபிடித்தார்

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments