Home Uncategorized ஊழலில் ஈடுபட்ட முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

ஊழலில் ஈடுபட்ட முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

அதிமுக ஆட்சியின் போது முறைகேடுகளில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் அவர்களுக்குத் துணை போன அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், மதுரையில் சிபிஎம் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் பேட்டி.            

தோழர் சங்கரய்யா நூற்றாண்டு விழா மற்றும் நிதி பங்களிப்பு கருத்தரங்கம் மதுரை கிருஷ்ணய்யர் கம்யூனிட்டி ஹாலில் நடைபெற்றது. இதில் கம்யுனிஸ்ட் (சிபிஎம்) மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, தமிழ்நாட்டில் மாணவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அச்சம் பயம் காரணமாக தொடர்ந்து மாணவ, மாணவிகள் தற்கொலைகள் தொடர்ந்து கொண்டிருக்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை பொருத்தவரை நீட் தேரவை ரத்து செய்ய வற்புறுத்தி வருகிறோம்.

நீட் தேர்வு எதிராக தமிழக மக்களுடன் தொடர்ந்து நாங்கள் போராடிக் கொண்டிருக்கிறோம். மாணவர்களும் இணைந்து போராட வேண்டும். தமிழக முதலமைச்சர் சொல்லி இருப்பது போல மாணவர்கள் நீட் தேர்வை முறியடிக்க போராட வேண்டும் என்று நாங்கள் கேட்டுக் கொள்கிறோம். அதற்கு மாறாக தற்கொலை ஈடுபடுவது உண்மையிலேயே மிக வேதனைக்குரியது. அது மிகவும் வருத்தமளிக்கிறது. வாழ வேண்டிய இளம் பிள்ளைகள் இப்படி அச்சத்தின் காரணமாக தற்கொலை முயற்சியை கைவிட வேண்டும். ஒன்றிய மோடி அரசு மாணவ, மாணவிகளின் தற்கொலை செய்தி தொடர்ந்து வந்தபிறகும் கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல் அவர்கள் நீட் தேர்வை விளக்க மறுக்கிறார்கள். தமிழக அரசு சார்பில் மசோதா தயாரிக்கப்பட்டு ஒன்றிய அரசினுடைய ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.’

குடியரசுத் தலைவர் இதெல்லாம் கணக்கில் எடுத்துக்கொண்டு உடனடியாக இந்த மசோதாவுக்கு ஒப்புதல் கொடுத்து தமிழ்நாட்டுக்கு நீட் தேர்விற்கு விதிவிலக்கு கொடுக்கவேண்டும். என்று மீண்டும் நான் வற்புறுத்தி கேட்டுக் கொள்கிறேன். தமிழக அரசு ஒப்புதல் பெற்று அதற்கான உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று தமிழக அரசு கேட்டுக்கொள்கிறேன்.

மாணவ, மாணவிகள் தற்கொலை செய்து கொள்ள வேண்டாம் என்று முதலமைச்சர்கள் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். பல்வேறு அரசியல் கட்சிகளும் வேண்டுகோள் விடுத்து இருக்கிறார்கள். அச்சம் கலந்த மாணவ மாணவிகளுக்கு மனநிலை மருத்துவர்கள் மூலம் அச்சத்தைப் போக்க நடவடிக்கைகள் தமிழக அரசு விரைந்து எடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உட்பட திராவிட முன்னேற்ற கழகம் அதன் சார்ந்த மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் அந்தந்த கட்சிகள் எதிர்பார்க்கக்கூடிய சுகுமான உடன்படிக்கைகள் ஏற்படும் என்று நான் நம்புகிறேன் அப்படிப்பட்ட நிலையில் நடைபெறக்கூடிய இந்த தேர்தலில் தொகுதி பங்கீடு என்பது நல்ல முறையில் நடத்தி நூறு சதவீதமான இடங்களில் திராவிட முன்னேற்ற கழக கூட்டணி வெற்றி பெறும். அதற்கான நடவடிக்கைகளை திமுகவும் எடுக்கணும் அதன் கூட்டணி கட்சிகளும் இணைந்து எடுக்கணும் என நான் கேட்டு கொள்கிறேன்.

ஒன்றிய அரசின் சமையல் எரிவாயு பல மடங்கு உயர்ந்து கொண்டே வருகிறது. அதற்கு மாநில பாஜக தலைவர் அண்ணாமலை மக்கள் பழையபடி விறகு அடுப்பு வைத்து சமைக்கணும் என்று சொல்லி இருக்கார். எவ்வளவு மோசமான பகுத்தறிவுக்கு சம்பந்தமில்லாமல் ஒரு வார்த்தையை சொல்லி இருக்கிறார் என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. இன்று பெண்கள் நவீன காலத்தில் நகரப்புறங்களில் விறகு வைத்து சமையல் செய்தால் பெண்கள் மிகவும் கஷ்டப்படுவார்கள்.

மோடி அரசுக்கு மூன்று மாதத்தில் பெட்ரோல், டீசல், எரிவாயு மூலம் ஒரு லட்சம் கோடி ரூபாய் வருமானம் வந்துள்ளது. ஏழை மக்களை வாட்டி வதைக்கும் எண்ணம், இன்னொரு பக்கம் டெல்லியில் விவசாயிகள் கடந்த 11 மாத காலமாக தொடர்ந்து போராடி வருகிறார்கள் இந்த போராட்ட பிரச்சினைகளை தீர்க்க குறைஞ்சபட்ச நடவடிக்கை கூட ஒன்றிய அரசு எடுக்கவில்லை.

ஒன்றிய அரசின் வேளாண்மைத்துறை அமைச்சர் என்ன சொல்றாருன்னா விவசாய விளைபொருட்களுக்கு நியாயமான விலை கொடுத்து விட்டோம் என்று சொல்லி இருக்கார். இந்த ஆண்டுக்கு ஒரு சதவீதம் கூட உயர்த்தப்படவில்லை.

இன்றைக்கு சந்தையில் விவசாயிகள் அடிமாட்டுக்கு பொருட்கள் விக்கிறதுக்கு நிலைமை ஏற்பட்டு இருக்கிறது. மோடி அரசு அடம்பிடித்து விவசாயிகளை நடுத்தெருவுக்கு கொண்டு வந்ததுள்ளது. மூன்று வேளாண்மை சட்டத்தை வாபஸ் பெற மாட்டோம் என்று சொல்கிறார்கள் வருகின்ற 27 ந் தேதி இந்தியா முழுவதும் விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மகத்தான பந்த் போராட்டம் நடைபெற இருக்கிறது.

தமிழ்நாட்டிலுள்ள இடதுசாரிகள் மற்றும் எல்லா கட்சிகளும் சேர்ந்து விவசாய சங்கங்கள் தொழிற்சங்கங்கள் மற்ற அமைப்புகள் எல்லாம் சேர்ந்து மிகப்பெரிய ரயில் மறியல் மற்றும் சாலை மறியல் போராட்டம் நடத்துவது என்று தீர்மானித்து உள்ளோம்.

கடந்த கால ஆட்சியில் அதிமுக அமைச்சர்கள் அளவுக்கு அதிகமாக ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்டார்கள் என்று எல்லாத்துக்கும் தெரியும். ஊழல் முறைகேடுகளை கண்டிக்கின்ற வகையில் அவர்களை எதிர்த்து வாக்களித்து உள்ளனர். எனவே பல துறைகளில் ரைடு நடத்தும் போது முறைகேடுகள் எல்லாம் வெளியில் வந்து கொண்டிருக்கிறது.

கடந்த ஆட்சியின் போது முறைகேடுகளில் ஈடுபட்டுள்ள அமைச்சர் மட்டுமல்ல அவர்களுக்கு துணை போன அதிகாரிகள் மீதும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

ஊழல் செய்தவர்கள் யாராக இருந்தாலும் அனுமதிக்கக்கூடாது. அமித்ஷா ஹிந்தி மொழியில் பேசினால் மாநிலம் வளர்ச்சி அடையும் என பேசியது அரைவேக்காட்டுத்தனமானது என கூறினார்.

Exit mobile version