Monday, March 23, 2026
HomeUncategorizedபலாப்பழம் சாப்பிட்டு இருப்பீங்க.. அதோட இலை சாப்பிட்டதுண்டா? எவ்ளோ நன்மைகள் தெரியுமா?

பலாப்பழம் சாப்பிட்டு இருப்பீங்க.. அதோட இலை சாப்பிட்டதுண்டா? எவ்ளோ நன்மைகள் தெரியுமா?

அல்சர் நோய் இன்றைய சமூகத்தில் பரவலாக உள்ள ஒரு பிரச்சனையாகும், இதற்கு நமது அன்றாட உணவு முறைகள் மற்றும் சத்து குறைந்த உணவுகள் முக்கிய காரணங்களாகும். அல்சர் நோய் வாய் துர்நாற்றம், வயிற்று வலி, அசிடிட்டி, மூல நோய், நெஞ்செரிச்சல் போன்ற பல தொந்தரவுகளை உண்டாக்கும். இந்த உடல் உபாதைகளிலிருந்து தப்பிக்க, நாம் ஆரோக்கியமான உணவு முறைகளை பின்பற்ற வேண்டும்.
பலாப்பழத்தின் கொட்டையில் உள்ள மருத்துவ குணங்களைப் போலவே, அதன் இலைகளிலும் அதிசயமான மருத்துவ குணங்கள் உள்ளன. பலா இலைகளில் உள்ள பைட்டோகெமிக்கல்கள் உயர்ந்த ஆண்டி ஆக்சிடென்ட்களாக உள்ளன, இவை நம் உடலுக்கு தேவையான பல நன்மைகளை அளிக்கின்றன.

பலா இலை மருத்துவம்:

பலாமரத்தின் புதிய நுனி இலைகளை பறித்து, நன்றாக கழுவி, நான்கு இலைகளை இரண்டு டம்ளர் தண்ணீரில் ஊற்றி, நன்றாக கொதிக்க வைத்து, தண்ணீர் ஒரு டம்ளர் அளவாக வற்றும் வரை விட்டு, அதனை வடிகட்டி காலையில் டீ போன்று குடிக்க வேண்டும். இதை ஒரு மாதம் வரை தொடர்ந்து பயன்படுத்தினால், ஏற்படும் பல நன்மைகளை நாம் காணலாம்.
இது வாயிலிருந்து ஆசன வாயில் வரையிலான புண்களையும் ரணங்களையும் ஆற்றும். இதன் மூலம் அஜீரணக் கோளாறு, நெஞ்செரிச்சல், வாய் துர்நாற்றம், புளிச்ச ஏப்பம் போன்ற தொந்தரவுகள் நீங்கும்.

உடல் எடையை குறைக்கும் 

உடல் எடையை குறைக்க விரும்பும் நபர்கள் இந்த தேநீரை பயன்படுத்தி நல்ல மாற்றங்களை அடைய முடியும். வயிற்றுப் பகுதியில் சேர்ந்துள்ள கொழுப்பு செல்களை கரைக்க உதவும் இந்த தேநீர், தொப்பையை குறைத்து மெலிதான உடல் ஆரோக்கியத்தை வழங்கும். ரத்தக்குழாயில் உள்ள கொழுப்புகளை கரைத்து, நல்ல ரத்த ஓட்டத்தை சீராக்கி, ரத்த அழுத்த நோயிலிருந்து தங்களை பாதுகாக்க முடியும். 

சர்க்கரை நோய் உள்ளவர்கள் இந்த தேநீரை குடித்து வந்தால், ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தி நோய் பாதிப்புகளிலிருந்து தங்களை காக்க முடியும். கல்லீரல், நுரையீரல், மண்ணீரல், கணையம், சிறுநீரகம், நரம்பு மண்டலம் போன்ற உறுப்புகளுக்கு உள் ஊட்டச்சத்தை அளித்து செயல்பட ஊக்குவிக்கும். இதில் உள்ள சைட்டோகெமிக்கல்கள் கேன்சர் நோய் வராமல் இருக்க உதவும், நோய் பாதிப்பு உள்ளவர்கள் இந்த தேநீரை குடித்து வந்தால் கேன்சர் நோயின் பாதிப்புகளிலிருந்து தங்களை பாதுகாக்க முடியும்.

ஆராத புண்களும் ஆறும். மருத்துவ குணம் மிக்க அபூர்வ சக்தி கொண்ட பலா இலையை நாம் வாழ்வில் சரியாக பயன்படுத்தி எல்லாவிதமான ஆரோக்கியங்களையும் அடைந்து இன்புற்று வாழலாம்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments