Thursday, April 30, 2026
HomeUncategorizedஊரக உள்ளாட்சித் தேர்தல் - முதல் கட்ட வாக்குப்பதிவு துவங்கியது

ஊரக உள்ளாட்சித் தேர்தல் – முதல் கட்ட வாக்குப்பதிவு துவங்கியது

தமிழ்நாட்டில் தற்போது புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் முதல் கட்ட வாக்குப்பதிவு வாக்குச்சாவடிகளில் இன்று துவங்கியது.

இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், வாக்குசாவடிகளுக்கு வந்து வாக்காளர்கள் உற்சாகமாக வாக்களித்து வருகின்றனர். மாலை 6 மணி வரை நடைபெறும் இந்த வாக்குப்பதிவு. மாலை 5 மணி முதல் 6 மணி வரை ஒருமணி நேரம் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களும், அதற்கான அறிகுறி உள்ளவர்களும் வாக்களிக்க பிரத்யேக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வாக்குப்பதிவை கண்காணிக்க மாநில தேர்தல் ஆணையத்தில் இணையதள வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாக்குப்பதிவை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments