Home Uncategorized ஊரடங்கு நீட்டிப்பா? – தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை

ஊரடங்கு நீட்டிப்பா? – தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை

தமிழகத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பதவியேற்ற பின் கொரோனா தொற்று பரவலைத் தடுக்க  கடந்த மாதம் முதல் ஊரடங்கு  அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கின் காரணமாக தொற்று குறைந்த மாவட்டங்களில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 28-ம் தேதி வரை அமலில் உள்ளது.
 
இந்நிலையில், ஊரடங்கு முடிய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனையில் ஈடுபடுகிறார். 

ஊரடங்கை நீட்டிக்கலாமா, வேண்டாமா என்பது குறித்து இன்று காலை 11 மணியளவில் மருத்துவ நிபுணர்கள், சுகாதாரத் துறை மற்றும் அரசு உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார். 

இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Exit mobile version