தமிழகத்தில் ஊரடங்கு வரும் 14ம் தேதியுடன் முடிவடையும் நிலையில், அதனை மேலும் 21ம் தேதி வரை, ஒரு வார காலத்திற்கு நீட்டிக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதில், தொற்று அதிகம் உள்ள கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களைத் தவிர, இதர 27 மாவட்டங்களில் தொற்று குறைந்து வருவதைக் கணக்கில் கொண்டு, ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டுள்ள சில செயல்பாடுகளுடன் கூடுதலாக கீழ்க்கண்ட செயல்பாடுகளும் அனுமதிக்கப்படும். அவற்றை விரிவாக பார்ப்போம்…
அழகு நிலையங்கள், சலூன்கள், குளிர்சாதன வசதி இல்லாமலும், ஒரு நேரத்தில் 50 சதவிகித வாடிக்கையாளர்கள் மட்டும் அனுமதிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் காலை 6.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
