தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று பரவல் படிப்படியாக குறைந்தாலும், உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில், ஊரடங்கை நீட்டிப்பது தளர்வுகள் வழங்கலாமா என்பது தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடைபெற்றது. சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனையில் தலைமை செயலாளர் இறையன்பு, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், டிஜிபி திரிபாதி, சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இந்த நிலையில், ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாகவும், மேலும் கூடுதல் தளர்வுகள் அளிக்கலாமா என்பது தொடர்பாகவும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் காலம் நீட்டிப்பு செய்ய உயர் அதிகாரிகள் பரிந்துரை அளித்துள்ளனர். மேலும் 11 மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகமாக இருப்பதால் அந்த மாவட்டங்களில் தளர்வு இல்லை. பிற மாவட்டங்களில் அதிகாலை நடைபயிற்சி, டாஸ்மாக் கடைகள் திறப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஓரிரு தினங்களில் தமிழக அரசின் சார்பில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
