Home Uncategorized உத்திரப்பிரதேச மாநிலம் பண்டேல்கண்ட் விரைவுச்சாலையை இன்று தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி..!

உத்திரப்பிரதேச மாநிலம் பண்டேல்கண்ட் விரைவுச்சாலையை இன்று தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி..!

உத்தரபிரதேச மாநிலம் சித்தரகூட மாவட்டத்தில் இருந்து எட்டாலா மாவட்டம் வரை 296 கிலோ மீட்டருக்கு புந்தேல்கண்ட் விரைவு சாலை ரூ.14,850 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது. 

இந்த விரைவுச் சாலையை இன்று பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

இதற்காக மோடி உத்தரப் பிரதேசத்தில் கான்பூர் நகருக்கு விமானத்தில் சென்றார்.

அவரை விமான நிலையத்தில் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். 

பின்னர் ஜலான் மாவட்டம் கைந்தேரி கிராமத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மோடி, புந்தேல்கண்ட் விரைவுச் சாலையை தொடங்கி வைத்தார்.

Exit mobile version