தருமபுர ஆதீனத்திற்குச் சொந்தமான திருச்சி திருக்கற்குடி எனும் உய்யக்கொண்டான் திருமலை ஸ்ரீஅஞ்சனாட்சி ஸ்ரீபாலாம்பிகா சமேத ஸ்ரீஉஜ்ஜீவநாத_சுவாமி திருக்கோவில் – மகா கும்பாபிஷேகப் பெருவிழா தருமையாதீன #ஸ்ரீலஸ்ரீ_கயிலை_குருமகாசந்நிதானம் திருமுன்னர் வெகு சிறப்பாக நடைபெற உள்ளது!!!
முன்னதாக ஸ்ரீ சொக்கநாதர் பூஜை கோபூஜை நடைபெற்று குருமணிகள் மணிவிழாவை முன்னிட்டு வருடத்தில் 365நாட்களும் நூல் வெளியீட்டு விழாவில் 28வது நூலாக கற்குடி வரலாறு மற்றும் திருப்பதிகங்கள் நூல் வெளியீடு செய்து குருமணிகள் அவதார தலத்தில் கட்டளை மடம் திறப்பு விழா பத்திரிகை படைக்கப்பெற்றது!!!
இவ்விழாவில் திருக்கயிலாய பரம்பரை பெருங்குளம் செங்கோல் ஆதீன ஸ்ரீலஸ்ரீ குருமகாசன்னிதானம்,தொண்டை மண்டல ஆதீன ஸ்ரீலஸ்ரீ குருமகாசன்னிதானம், திண்டுக்கல் சிவபுர சிவபுரம் ஆதீனம் திண்டுக்கல் ஸ்ரீலஸ்ரீ குருமகாசன்னிதானம், ,தருமையாதீன திருக்கூட்டத்து தம்பிரான் சுவாமிகள், சிவாச்சாரியார்கள் ஓதுவார்கள் பணியாளர்கள் சிப்பந்திகள்,ஆதீன அன்பர்கள்,பக்தர்கள்,ஊர் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தார்கள்!!!
திருக்கயிலாய பரம்பரை தருமை ஆதீனத்திற்குச் சொந்தமான திருக்கற்குடி உய்யக்கொண்டான் திருமலை ஸ்ரீ அஞ்சனாட்சி ஸ்ரீ பாலாம்பிகை உடனாகிய ஸ்ரீ உஜ்ஜிவநாத சுவாமி திருக்கோயில் மஹாகும்பாபிஷேகப் பெருவிழாவில் ஸ்ரீலஸ்ரீ குருமகாசந்நிதானம் அவர்கள் திருக்கரங்களால் பொற்பதக்க விருது பெறுபவர்கள் 1.”சிவாகம கலாநிதி” மதுரை சிவஸ்ரீ ம. சிவராஜ் பட்டர் 2. “திருமுறைக் கலாநிதி” கோவை திரு. மா.கண்ணப்பன் (எ) நல்லதம்பி ஓதுவார் 3. “தருமை ஆதீனப் புலவர்” மதுரை முனைவர் திரு.கு.ஞானசம்பந்தன் 4. ” தருமை ஆதீனப் புலவர்” (ஓலைச்சுவடித் துறை ) நெல்லை திரு.வே.கட்டளைகைலாசம் 5. “தருமை ஆதீனப் புலவர்” மயிலாடுதுறை திரு.இரா.செல்வகுமார் 6. “நாதஸ்வர கலாநிதி” மன்னார்குடி திரு.சா.க.சங்கரநாராயணன் 7.”மேளக்கர்த்தா கலாநிதி” தஞ்சாவூர் திரு.ஆர்.கோவிந்தராஜன் #குருபாதம் (14/11/24)
