ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே பண்ணாரியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலுக்கு நடிகர் வடிவேலு நேற்று மாலை சென்றார். இந்த கோவிலுக்கு நடிகர் வடிவேலு வந்த தகவல் தெரியவந்தது அவரை பக்தர்கள் சூழ்ந்து கொண்டு பலர் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
அப்போது அங்கு கோவிலில் துப்புரவு வேலையில் ஈடுபட்டு கொண்டிருந்த பெண் ஒருவர் தயங்கிபடி வந்து வடிவேலுவின் காலில் விழுந்து வணங்கினார்.
உடனே அந்த பெண்ணை தூக்கி விட்டதுடன், நன்றாக இருங்கள் என அவரை வடிவேலு வாழ்த்தினார்.
மேலும் அந்த பெண்ணை “வாம்மா நீ தான் என் தங்கச்சி” எனக்கூறியபடி, ஆரத்தழுவி தோளில் கை போட்டு புகைப்படம் எடுத்துவிட்டு அங்கிருந்து வடிவேலு புறப்பட்டு சென்றார். இவரின் இந்த செயலை அவருடைய ரசிகர்கள் நெகிழ்ந்து பாராட்டி வருகின்றனர்.

