Home Uncategorized வாணி! சரஸ்வதியே!

வாணி! சரஸ்வதியே!

வாணி! சரஸ்வதியே!!

    வாக்கினிலே அமர்வாய்!!

வருகின்ற வார்த்தையினை 

    செந்தமிழாய்த் தருவாய்!!

 

ஆணித் தரமாக அமர்ந் 

     தெம்மை ஆள்வாய்!!

அருந்தமிழ் ஆரமுதை 

     அருவியாய் சொரிவாய்!!

 

காணுகின்ற காட்சிகளை

    கவிதையாக வடித்து

கற்பனைத் தேரேறி

     களித்துலவ அருள்வாய்!!

 

பேணுகின்ற சனாதன

     பெருமைகளை பேசி

பிறர்மனம் புண்படாது

      பின்பற்றச் செய்வாய்!!

 

வீணை ஒலிபோல் 

     விளங்கிடச் செய்வாய்!!

விளக்குத் தீபமாய்

     மேலோங்கச் செய்வாய்!!!

 

கூனி எவர்முன்னும் 

    குறுகிநான் நில்லாது

கொடுத்த தமிழாலே 

   கோபுரம்போல் வைப்பாய்!

 

மானுடம் எழுதவும்

    மனங்களில் சேரவும்

தானுடல் தந்ததை

    தானறிந்தேன் அருளுவாய்!!

 

என்முனே இறுமாப்புடன்

    எவர்வந்து நிற்பினும்

கண்முனே காலடி

    கண்டிடச் செய்குவாய்!!

 

வானையே வார்த்தையால்

   வளைத்திடும் வல்லமை

வாணிநீ!! தருவாய்!!

    வான்புகழ் செய்குவாய்!!

 

தாநீ!!எனு முன்னே 

    தடையில்லா தமிழ்தந்து

தலைக்கணம் தோன்றாது 

     அடைக்கலம் செய்வாய்!!!

Exit mobile version