Home Uncategorized வானியல் ஆர்வலர்களை மகிழ்விக்கும் வகையில், ஒரே நேரத்தில் 6 கோள்கள் அணிவகுக்க உள்ளன

வானியல் ஆர்வலர்களை மகிழ்விக்கும் வகையில், ஒரே நேரத்தில் 6 கோள்கள் அணிவகுக்க உள்ளன

கோள்கள் வானில் ஒரே வரிசையில் தோன்றுவது சிறப்பு இல்லை என்றாலும், அவற்றில் பலவற்றை ஒரே நேரத்தில் பார்ப்பது அரிது.

அத்தகைய ஒரு அரிய நிகழ்வு நடக்க உள்ளது. ஜன.,22ம் தேதி முதல் 25ம் தேதி வரை வானியல் ஆர்வலர்களை மகிழ்விக்கும் வகையில், ஒரே நேரத்தில் 6 கோள்கள் அணிவகுக்க உள்ளன.

வெறும் கண்களால் வெள்ளி, வியாழன், சனி மற்றும் செவ்வாய் ஆகியவற்றை பார்க்க முடியும். ஆனால் நெப்டியூன் மற்றும் யுரேனஸை சக்திவாய்ந்த தொலைநோக்கி மூலம் மட்டுமே பார்க்க முடியும்.

ஜன. 22ம் தேதி முதல் ஜன., 25ம் தேதி வரை, மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை சென்னை கோட்டுபுரத்தில் உள்ள பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தில், பொதுமக்கள் பார்வையிட தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம் ஏற்பாடு செய்துள்ளது.

கோவையில் மண்டல அறிவியல் மையத்திலும் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Exit mobile version