வாராஹி ஆஷாட நவராத்திரி 10.07.2021 – 19.07.2021
எவரொருவர் வாராஹியின் பாதாரவிந்தங்களை பக்தி சிரத்தையுடன் சேவிக்கிறார்களோ , அவர்களுடைய பாவக்குவியல்களை ஒரு நொடி பொழுதில் நீக்குகிறாள் தேவி.பாவங்களைக் களைந்து வினையின் பிடியிலிருந்து உபாஸகனை காக்கிறாள். அவளுடைய அனுகிரகத்தினாலே அதிக பிரயத்தனம் இல்லாமல் இகபர சுகங்கள் யாவும் எளிதில் சாதகனுக்கு சித்திக்கின்றன.அளவில்லா செல்வா செழிப்பை அடைந்து ஸௌபாக்கியவான்களாக திகழ்வார்கள்.
காலம் 16-ஆம் நூற்றாண்டு. சிவனின் பாகம் சத்தி. சத்தியை ஏழு கூறுகளாகப் பகுத்துப் பார்ப்பது உண்டு.அபிராமி, நாராயணி, இந்திராணி, கௌமாரி, வாராகி, துர்க்கை, காளி இவர்களில் வாராகி என்பவளை பற்றி இந்த கட்டுரை மூலம் பார்ப்போம்.
சோழ அரசர்களின் இஷ்ட தெய்வமாக விளங்கிய வாராஹிக்கு தஞ்சை பெரியகோயிலில் சந்நிதி உள்ளது. வாராஹி மாலை என்னும் நூலை எழுதிய சுந்தரேசர், சோழ மன்னரான குலோத்துங்கனின் படையில் குதிரைப்படைக்குத் தலைமை வகித்தவர்.
வாராஹியை வழிபடுபவருக்கு எதிரிகளின் தொல்லை நீங்கி, வளமான வாழ்வு உண்டாகும். வாராஹி – ரூபலக்ஷ்ணம் (திருவுருவ அமைப்பு) விஷ்ணுவின் தசாவதாரங்களில் ஒன்றான வராக அவதாரத்தின் அம்சமாக அவதரித்தவள் – வாராஹி. வராக (பன்றி) முகமும் – நான்கு கரங்களும் உடையவள். கீழ் இரு கரங்களை அபய – வரதமாகவும்; மேல் வலக்கரத்தில் தண்டமும் – இடக்கரத்தில் கலப்பையும் கொண்டவள்.
கருப்பு நிறமுடைய ஆடையை உடுத்திக் கொண்டிருப்பவள். கிரீட மகுடம் தரித்து – சிம்ம வாஹனத்தில் அமர்ந்திருப்பவள். இவள் அசுரன், உலகைத் தூக்கிக் கொண்டு கடலுள் ஒழிந்தபோது, வராக அவதார மெடுத்து மீட்டுக் கொண்டு வந்தவள். எனவே, இவளை வழிபட்டால், எதிரிகளை அழித்து வெற்றி அடையலாம்.
பெண்கள் உபாசித்தால் கற்பு நிலையைக் காப்பாற்றிக் கொள்ளலாம். அதற்குத் தீங்கு நேரும்போது, எதிர்த்து நின்று காத்தருள்வாள்! வராகி பாடல்: கரியின் தோல் திருமேனியிற் கவினுறப் போர்த்தி அரியின் கண்ணடி அணிதரும் அண்ணலைச் சத்தி புரியின் மேவிய பொருளினை வராகி பூசித்தாள் தெரியின் மேம்படு வரமெலாம் சிறப்புறப் பெற்றாள்.
வாராகி விஷ்ணு அம்சி – பூஜா ஆசன மூர்த்தி மூலம்: ஓம் – ஹ்ரீம் – வாராகி – ஆசனாயயாய – நம: ஓம் – ஹ்ரீம் – வம் – வாராகி மூர்த்தியை – நம: ஓம் – ஹ்ரீம் – ஸ்ரீம் – வம் – வாராகியை – நம: காயத்ரி: ஓம் – மஹிசத்வஜாயை வித்மஹே தண்ட ஹஸ்தாயை தீமஹி; தந்நோ, வராஹி ப்ரசோதயாத் தியான ஸ்லோகம்: ஏக வக்த்ராம் த்விநேத்ராம்ச சதுர்புஜ சமன் விதாம்; க்ருஷ்ணாம்பர தராம், தேவிம் வராஹ சக்ர ஸம்யுதாம்; ஹசலமுஸல ஹஸ்தாம் தாம் வரா பயகராம்புஜாம்; ஸிம்ஹ வாஹ ஸமாரூடாம் கிரீட மகுடோஜ் வலாம்; ஸர் வாலங்கார ஸம்பன்னாம், வாராஹிம் பூஜயேத்புத மூல மந்திரம்: ஓம் – ஹ்ரீம் – ஸ்ரீம் – வம் – வாராகியை – நம : சதுரங்க சேனா நாயிகா என்றொரு திருநாமம் உண்டு.
அதாவது அம்பிகையின் நால்வகைப் படைகளுக்கும் சேனாதிபதியாகத் திகழ்பவள் என்று அர்த்தம். இவளை, தண்டினி என்றும் சொல்வர். சப்த மாதர்களில் ஒருவரான இவள்…ஸ்ரீவாராஹி! சிறந்த வரப்பிரசாதி. நம் மனத்துள் எண்ணங்கள் தோன்றினால் மட்டும் போதாது.
அது காரியமாக, செயலாக மாறவேண்டும் அல்லவா? அப்படி எண்ணத்தைக் காரியமாக மாற்றும் சக்திதான், ஸ்ரீவாராஹி தேவி. ஒட்டுமொத்த பிரபஞ்ச சக்தியைக் குறிப்பவளுக்கு நம் மனத்தை அறிந்துகொள்வதெல்லாம் எம்மாத்திரம்? ஆடி மாதத்தில் ஸ்ரீவாராஹியை வழிபடுவது சிறப்பு.
இந்த மாதத்தில், ஆஷாட நவராத்திரி நாட்களிலும் ஆடி மாதத்தில் செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளிலும் ஸ்ரீவாராஹிதேவிக்கு சர்க்கரைப் பொங்கல், உளுந்து சாதம், வடை, தயிர்சாதம் என இவற்றில் ஒன்றைக் கொண்டு நைவேத்தியம் செய்து (பால் சாதம், திலா அன்னம், எள்ளுருண்டை நைவேத்தியமும் செய்யலாம்), மல்லி, முல்லை, நீலசங்கு புஷ்பம், கருந்துளசி, வில்வம், மருக்கொழுந்து, செந்தாமரை, வெண்தாமரை ஆகிய பூக்களால் அர்ச்சித்து வழிபட்டால், சகல ஐஸ்வரியங்களும் பெறலாம்.
ஸ்ரீவாராஹிக்கு உகந்த சிவப்பு, நீலம் மற்றும் பச்சை புடவையைச் சார்த்தி வழிபடுவது, கூடுதல் பலனைத் தரும். தமிழகத்தில் சிவாலயங்கள் பலவற்றிலும் சப்தமாதர்களுக்கு சந்நிதிகள் உள்ளன. குறிப்பாக, தஞ்சாவூர் பெரியகோயில் முதலான சில ஆலயங்களில், ஸ்ரீவாராஹி தேவிக்கு தனியே சந்நிதிகள் அமைக்கப்பட்டுள்ளன.
தேஹி மே சகலான் காமான் வாராஹி ஜகதீஸ்வரி நமஸ்துப்யம் நமஸ்துப்யம் நமஸ்துப்யம் நமோ நம: இது, ஸ்ரீவாராஹியின் மூலமந்திரம். இதனை செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மனம் ஒருமித்து, முடிந்தவரைக்கும் சொல்லி வழிபட்டால், வீட்டில் உள்ள பிரச்னைகள் காணாது போகும்.
எதிரிகள் தொல்லைகள் நீங்கும். பிரிந்த தம்பதி ஒன்று சேருவர். வாழ்வில் நிம்மதியும் சந்தோஷமும் பொங்க வாழலாம்! வராகியை பஞ்சமி திதி அன்று தேங்காயில் நெய் ஊற்றி விளக்குப் போட்டு வழிபடுவர்.
ஸ்ரீவாராஹி தாயே… உன் திருவடி சரணம்!

