Sunday, May 24, 2026
HomeUncategorizedவாட்ஸ்அப்பில் புதிய அப்டேட்

வாட்ஸ்அப்பில் புதிய அப்டேட்

வாட்ஸ்அப் மெசஞ்சரை ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் தளங்களுடன் லிங்க் செய்யும் அம்சம் அறிமுகமாகி உள்ளது.

இந்த அம்சம் ஒரே நேரத்தில் பல செயலிகளில் பதிவுகளை பகிரும் அனுபவத்தை பயனர்களுக்கு வழங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது..

இது வாட்ஸ்அப்பில் தொடர்ந்து அப்டேட் செய்யும் பயனர்களும் உதவும். இந்த அம்சம் உலக முழுவதும் படிப்படியாக வெவ்வேறு கட்டங்களில் வரும் நாட்களில் அறிமுகம் செய்யப்படும் என மெட்டா தெரிவித்துள்ளது.

இந்த அம்சம் இன்ஸடாகிராம் மற்றும் ஃபேஸ்புக்கில் நீண்ட நாட்களாக உள்ளது. தற்போது அதில் வாட்ஸ்அப் சேர்க்கப்படுகிறது.

`வாட்ஸ்அப் மெசஞ்சரை எப்படி ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாவுடன் லிங்க் செய்வது?` பயனர்கள் வாட்ஸ்அப் செயலியை அப்டேட் செய்ய வேண்டும் அல்லது லேட்டஸ்ட் வெர்ஷன் பயன்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும்.

பின்னர் செட்டிங்ஸ் சென்று அதில் அக்கவுண்ட்ஸ் சென்டர் ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும். அதில் அக்கவுண்ட்ஸ் சென்டர் ஆப்ஷன் இல்லை என்றால் சம்பந்தப்பட்ட பயனர் வசிக்கும் பிராந்தியத்தில் அந்த ஆப்ஷன் இன்னும் வெளியாகவில்லை என அர்த்தம்.

அந்த ஆப்ஷன் இருந்தால் கணக்கை லிங்க் செய்யலாம். அப்போது லாக்-இன் விவரங்கள் கேட்கப்படும். அதில் பதிவுகளை ஷேர் செய்யும் முன்னுரிமையை பயனர்கள் தேர்வு செய்து கொள்ளலாம்.

இந்த அம்சம் பயனர்களுக்கு தேவை இல்லை என்றால் அதை அக்கவுண்ட்ஸ் சென்டரில் இருந்து நீக்கிக் கொள்ளலாம்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments