புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் திரு செல்வப் பெருந்தகை அவர்களை தமிழக ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் திரு வசீகரன் அவர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து கூறினார், இந்தியாவின் பேராபத்தான மோடியையும் பாரதிய ஜனதா கட்சியையும் வீழ்த்துவது குறித்தும் தமிழகத்தில் உள்ள தமிழகம் பாண்டிச்சேரி உட்பட உள்ள 40 தொகுதிகளையும் வெற்றி பெற செய்வதற்கான இந்தியா கூட்டணியை திமுக தலைமையிலான கூட்டணியை வெற்றி பெற செய்வதற்கான பிரச்சார யுக்திகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
அது சமயம் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈரோடு சட்டமன்ற உறுப்பினர் திரு இ வி கே எஸ் இளங்கோவன், மாநில பொருளாளர் நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் திரு ரூபி மனோகரன், காங்கிரஸ் மூத்த தலைவர் திரு.கோபண்ணா, திரு எஸ் எம் இதயாதுல்லாஹ் மற்றும் காங்கிரஸ் முன்னணி தலைவர்கள் உடனிருந்தனர்.
தமிழக ஆம் ஆத்மி கட்சி சார்பில் மாநில மகளிர் அணி தலைவி & மாநில குழு உறுப்பினர் திருமதி ஸ்டெல்லா மேரி,மாநில மனித உரிமை பிரிவு செயலாளர் திரு.ஏ.டி.முருகன், மாநில மகளிரணி பொருளாளர் திருமதி கைசர்,
வடசென்னை மாவட்ட தலைவர் திரு.பாரூக், தென்சென்னை மாவட்ட தலைவர் திரு வினோத் குமார், மத்திய சென்னை மாவட்ட தலைவர் திரு.ஆரிப், மேற்கு சென்னை மாவட்ட தலைவர். திரு.பன்னீர்செல்வம், வட சென்னை மாவட்ட செயலாளர் திருமதி சோபியா பாமா ராணி, தென் சென்னை மாவட்ட செயலாளர் திரு மணிகண்டன், திரு சுரேந்திரன், திரு அனுப், திரு.ஸ்ரீ கணேஷ், திரு பாஷா, திரு.ராதாகிருஷ்ணன், திரு.காந்தராவ், திரு விஜயகுமார், திரு.வாசு, திரு.கிருஷ்ணா நாதன் மற்றும் பலர் பங்கேற்றனர்.
