Home Uncategorized வாரிசா? துணிவா?- நடிகர் வடிவேலு பேட்டி

வாரிசா? துணிவா?- நடிகர் வடிவேலு பேட்டி

நடிகர் வடிவேலு திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்திருந்தார். அப்போது, செய்தியாளர்கள் கேள்விகளுக்கு இவ்வாறு பதில் அளித்தார்.

‘ எத்தனையோ கோவில்கள் இருந்தாலும் திருச்செந்தூர் முருகன் கோவில் சிறப்பு பெற்றது. என்ன மணக்குறைகள் இருந்தாலும் திருச்செந்தூர் முருகன் சன்னிதானம் வந்தால் மணக்குறைகள் நீங்கும் என தெரிவித்தார்.

மேலும், அவரிடம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் படங்களான வாரிசு, துணிவு குறித்து  செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தவர் “ 2 படங்களுமே வெற்றியடைய வேண்டும்.எல்லா படங்களும் பெரிய வெற்றிபெறண்டும். 

சினிமா நல்லா இருந்தால்தான் அனைவரும் நன்றாக இருக்க முடியும் என விருப்பம் தெரிவித்தார்.நான் எந்த கட்சியிலும் கூட்டணியிலும் இல்லை. என்னுடைய முந்தைய காமெடி நடிகர்கள் கூட்டணி வந்தால் இணைந்து நடிக்கவேண்டியதுதான்  என தனது பாணியில் பதில் அளித்தார்.
 

Exit mobile version