உழைத்தவர்களுக்கு ஊதியம் இல்லை! வேலையே செய்யாதவர்களுக்கு ரூ.14 கோடி சம்பளம் வழங்கிய அரசு! – ராமதாஸ் பகீர்!
வேலையே செய்யாதவர்களுக்கு ரூ.14 கோடி வாரி இறைப்பு: உழைத்தவர்களுக்கு ஊதியம் இல்லை – ஊரக வேலைத் திட்ட மோசடி குறித்து விசாரணை நடத்த வேண்டும்!
தமிழ்நாட்டில் 2024-25ஆம் ஆண்டில் ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை செயல்படுத்தியதில் 78 ஆயிரத்து 784 முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், அவற்றின் மூலம் ரூ.14 கோடிக்கும் கூடுதலான தொகை கையாடல் செய்யப்பட்டிருப்பதாகவும் சமூகத் தணிக்கை வாயிலாக தெரியவந்துள்ளதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. அப்பட்டமான முறைகேடுகள் நடந்திருப்பது தெரியவந்திருக்கும் போதிலும், அவற்றின் மீது தமிழக அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காதது கண்டிக்கத்தக்கது.
