Sunday, March 15, 2026
HomeUncategorizedவீராங்கனை புகைப்படத்தை அனுமதியின்றி பயன்படுத்திய மேட்ரிமோனி

வீராங்கனை புகைப்படத்தை அனுமதியின்றி பயன்படுத்திய மேட்ரிமோனி

இந்தியாவின் முன்னணி மேட்ரிமோனி தளங்களில் ஒன்றான பாரத் மேட்ரிமோனி, பெண் ஒருவரின் அனுமதியின்றி அவருடைய புகைப்படத்தைப் பயன்படுத்தியிருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

மராத்தான் ஓட்டப்பந்தய வீராங்கனையும் சமூக வலைப்பதிவாளருமான ஸ்வாதி முகுந்த் என்பவருடைய புகைப்படத்தைத்தான் அந்த மேட்ரிமோனி தளம் பயன்படுத்தியுள்ளது.

இவருக்கு திருமணம் ஆகிவிட்டது. இந்த திருமணம் மேட்ரிமோனி தளம் நடைபெற்றதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால், இதை ஸ்வாதி முகுந்த் மறுத்துள்ளார். தவிர, இதுபோன்ற தளங்களைப் பயன்படுத்தும்போது மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும் என அவர் எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து அவர், தன் இன்ஸ்டா பக்கத்தில் ’பாரத் மேட்ரிமோனி ஸ்கேம்’ என்ற தலைப்பில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ”என்னை மிகவும் திகைக்க வைத்தது என்னவென்றால், இந்த பாரத் மேட்ரிமோனியின் உயரடுக்கு சந்தா சேவையாகும். இந்தச் சேவையின் மூலம் அவர்கள் உண்மையில் மக்களிடம் நிறைய பணம் வசூலிக்கிறார்கள்.

மேலும் தங்கள் பயனர்கள் சரியான வாழ்க்கைத் துணையை கண்டுபிடிப்பதை உறுதிசெய்ய அவர்கள் சுயவிவரங்களைத் திரையிடுவதாகவும் கவனமாகக் கண்காணிப்பதாகவும் கூறுகிறார்கள்” என அவர் தெரிவித்துள்ளார்

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments