யார் சார் புகழ் ஞானசேகரன் குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தியதில், ஞானசேகரன் மீது ஏற்கெனவே திருட்டு, அடிதடி, வழிப்பறி, ஆள் கடத்தல் என 20 வழக்குகள் இருப்பது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது.
தொடர்ந்து, பள்ளிக்கரணையில் நடந்த 7 திருட்டு வழக்கு தொடர்பாக ஞானசேகரனை 3 நாள் காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
2022-24 வரை பள்ளிக்கரணை பகுதிகளில் உள்ள பெரிய வீடுகளில் காரில் சென்று திருட்டில் ஈடுபட்டதாக ஞானசேகரன் வாக்குமூலம் அளித்தார்.
முதற்கட்டமாக பள்ளிக்கரணையில் 7 வீடுகளில் திருடியதை ஞானசேகரன் ஒப்புக் கொண்டுள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்தனர்.
தொடர்ந்து ஞானசேகரன், 7 திருட்டு வழக்குகளில் தற்போது கைது செய்யபப்ட்டுள்ளார்.
