மூன்று நாட்கள் மட்டுமே உறவினர்கள் வீடுகளில் தங்கினால் மரியாதை அதற்கு மேல் தங்க கூடாது என்று பலர் பழமொழி சொல்வார்கள் விருந்தும் மருந்தும் மூன்று நாட்கள் மட்டுமே என்று !
நாளிலும் கோளும் நலிந்தோர்க்கு இல்லை !என்றும் ஒரு பழமொழி பலகாலமாக உண்டு.
நம் முன்னோர்கள் சொன்ன பல வாக்கியங்களை சரியாக வாங்கி கொள்ளாமல் வாய்க்கு வந்தது போல் மாற்றி மாறி புரிந்து கொள்வதே நம் தற்போதைய தமிழர் பண்பாடு! ஒரு செயலை செய்யும் முன் கிழமையை முக்கியமாக கவனிக்க வேண்டும் ! தற்போது தமிழர் பண்பாட்டில் ஞாயிற்றுக்கிழமை என்றால் அசைவ உணவு உண்ணும் நாள் என்று வரையறை செய்யப்பட்டுள்ளது. விருந்திற்கு என கிழமை உண்டு !
திங்கள் புதன் வெள்ளி விருந்துண்டு மகிழ என்று மூன்று நாட்கள் உள்ளது. மருந்துன்ன என்று கிழமை உண்டு ! வாரத்தில் ஏழு நாட்களில் ஞாயிற்றுக்கிழமை, செவ்வாய் வியாழன் மருந்து உண்ணும் நாள்!
இந்த கிழமைகளில் இந்த செயல் செய்ய வேண்டும் என்ற தியதி உண்டு! அதை புரிந்து செயல் பட வேண்டும்! இதில் மருந்து ண்ண தான் அவசியம் கிழமை காண வேண்டும் பிறந்த கிழமை, சந்திராஷ்டமம் இல்லாத நாட்களில் மருந்து உட்கொள்ளும் போது வெகு விரைவில் நலம் பெறலாம்!
நம் ஜென்ம நட்சத்திரத்தை முதல் நட்சத்திரமாக கொண்டு எண்ணும் போது 3,5,7 வந்து நட்சத்திரம் அன்று தான் உடல்நலம் பாதிப்பு தெரியும் !அவசர சிகிச்சை செய்ய நாள் கிழமை எதுவும் இல்லை உடனடியாக சிகிச்சை செய்ய வேண்டும் என்று தான் நாளும் கோளும் நலிந்தோர்க்கு இல்லை என்றார்கள்!
பழங்காலத்தில் வைத்தியரிடம் எதையும் மறைக்க கூடாது என்று சொல்ல காரணம் நம் பிறந்த கிழமை, நட்சத்திரம் , திதி அறிந்து தான் வைத்தியம் செய்வார்கள். காலண்டரில் சுப மூகூர்த்தம் என்று போட்டு இருப்பதால் மட்டுமே அது சுப நாட்கள் இல்லை நமக்கு அந்த நட்சத்திரம் திதி கிழமை சாதகமான நாட்களாக இருக்கவேண்டுமே தவிர எல்லா நாளும் நல்ல நாட்கள் இல்லை!
புது வைத்தியம் பார்க்க தொடங்கும் போது நம் பிறந்த கிழமைகளில் எக் காரணம் கொண்டும் தொடங்கவே கூடாது! வியாதி இந்திய தனிமனித கடன் தொகை போல் நீளுமே தவிர கட்டுக்குள் வராது! வைத்தியரிடம் கொடுக்கும் தொகையை வாணியரிடம் கொடு என்று ஒரு பழமொழி உண்டு!
சனி நீராடு என்று சொல்லி எண்ணெய் தேய்த்து குளித்து வர வேண்டும் என்று சனி கிழமையை முக்கியமாக சொன்னார்கள் சனி கிழமை செய்யும் செயல்கள் மறுபடியும் செய்யும் படி அமையும் நவதான்யத்தில் சனியின் எள்ளில் மட்டுமே எண்ணெய் வரும் சனி கிரகமும் குளிர்ச்சியான நட்சத்திரம் எள் எண்ணெய் குளிர்ச்சியை உண்டாக்கும்! ஜாதக கட்டத்தில் இரண்டாம் கட்டத்தில் சனி கிரகம் இருந்தால் அவர்கள் பேச்சு மற்றவர்களுக்கு குளிர்ச்சியாக இருக்கும் (நிறைய வாழைப்பழ ஊசி வார்த்தைகளும் இருக்கும் நேரடியாக கடித்து பேச மாட்டார்கள்)
சனியை போல் கொடுப்பவரும் இல்லை கெடுப்பவரும் இல்லை ! நவகிரகங்களில் சனியை வழிபாடு செய்யும் போது நேருக்கு நேராக நின்று வணங்க கூடாது என்று சொல்வார்கள் ! காரணம் காகம் தலை சாய்த்து பார்க்கும் பறவை!
எள்ளை கண்டால் பலர் கல்லை கண்டது போல் ஓடுவார்கள்! (கடற்)கரை எவ்வளவு நல்லதோ அதே அளவு எள்ளும் நல்லதே செய்யும்.

