‘வலிமை’ படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்துவிடும் முனைப்பில் இருக்கிறது அஜித் & வினோத் டீம். படத்தின் சில காட்சிகள் மட்டும் இன்னும் எடுத்துமுடிக்கப்படவேண்டும் என்பதால் அதற்கான வேலைகள் இப்போது பரபரப்பாக நடக்கின்றன.
அஜித் சம்பந்தப்பட்ட ஒரு பைக் ஸ்டன்ட் ரேஸ் காட்சி இன்னும் எடுக்கப்படவேண்டியிருக்கிறது. அதற்காக நாளை ரஷ்யா செல்கிறார் அஜித். இயக்குநர் வினோத் உள்பட படக்குழுவினர் ஏற்கெனவே ரஷ்யா போய் இறங்கிவிட்டது குறிப்பிடத்தக்கது
