Home Uncategorized யார் வள்ளலார் ? – மு.பழனிவாசன் ( பகுதி 5)

யார் வள்ளலார் ? – மு.பழனிவாசன் ( பகுதி 5)

இறையடி இணைதல்

அரை நூற்றாண்டு காலம் வாழ்ந்த 30-01-1874 ஆம் ஆண்டு தைப்பூச நட்சத்திரத்தன்று இரவு 12 மணி வரையில் சித்தி வளாகத்தின் வெளியே அன்பர்களுடன் இருந்த வள்ளலார், ”நான் சித்தி வளாகத்தினுள்ளே செல்கிறேன். நானாக திறக்கும் வரை கதவுகளைத் திறக்க வேண்டாம். ”என்று கூறியபடி உள்ளே சென்று தரையில் விரிப்பு ஒன்றை விரித்து படுத்திருக்கிறார்.  அவர் வார்த்தைகளுக்கு கட்டுப்பட்டு அவரது அடியவர்கள் அதன்படியே இருந்துள்ளனர்.  

சிலதினங்கள் கழிந்த பின்னர் ஏதோ சில செய்திகளின்படி அப்போதைய தென்னாற்காடு மாவட்ட ஆங்கிலேய கலெக்டர் ஒரு மருத்துவருடன் மேட்டுக்குப்பத்திற்கு ஆய்வுக்காக சென்றுள்ளார். கதவைத்திறந்தால் துர்நாற்றம் வருமோ என யோசித்தப்படியே, சித்தி வளாக கதவைத் திறந்தவர் ஆச்சரியப்பட்டிருக்கிறார். ஏனெனில் அங்கே வள்ளலார் உடல் இல்லை. அவர் ஜோதி ரூபமாகவே காற்றில் கலந்திருக்கிறார் என உணர்ந்து அறிவிப்பு செய்துள்ளனர். 

”ஆனால், அருட்பிரகாச வள்ளலார் அவர்கள் சனாதனவாதிகளாலோ, வேறு யாரோ எதிரிகளாலோ, கொலை செய்யப்பட்டார்…அதனை மூடி மறைக்க அவர் ஜோதியில் கலந்துவிட்டார் என செய்தி பரப்புரை செய்தார்கள் ” என நாக்கூசாமல் கூறுகிறார்கள். 

இதுமட்டுமின்றி வேறுசிலரால் (வதந்தி பரப்பும் குழுக்களால்)  தன் கொள்கையை எவரும் சரிவர பின்பற்றவில்லை என மனம் நொந்த நிலையில் வள்ளலார் ”சித்தி வளாக அறைக்குள் சென்று அறைக்கு தாழிட்டு, தற்கொலை செய்துகொண்டார்”என்றும் கதை கட்டுகிறார்கள்.

Exit mobile version