Home செய்திகள் அனந்த் அம்பானியின் ‘வந்தாரா’ மீண்டும் சர்ச்சையில்… அரிய விலங்குகள் இறக்குமதி குறித்து கேள்விகள்!

அனந்த் அம்பானியின் ‘வந்தாரா’ மீண்டும் சர்ச்சையில்… அரிய விலங்குகள் இறக்குமதி குறித்து கேள்விகள்!

ரிலையன்ஸ் குழுமத்தின் ஜாம்நகர் எண்ணெய் சுத்திகரிப்பு வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள அனந்த் அம்பானியின் ‘வந்தாரா’ (Vantara) வனவிலங்கு காப்பகத்தைப் பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2025 மார்ச் 4 அன்று திறந்து வைத்தார்.

இந்த வந்தாரா மையத்திற்காகப் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள பல விலங்குகள், சர்வதேச வர்த்தகத் தடைக்கு உட்பட்ட அரிய வகை இனங்களைச் சேர்ந்தவை என்ற விவாதம் எழுந்துள்ளது. இந்தியாவில் வனவிலங்கு வர்த்தகம் மற்றும் விலங்குகளைச் சொந்தமாக வைத்திருப்பது தொடர்பான சட்டங்கள் அண்மைக்காலமாகத் தளர்த்தப்பட்டதே, இந்த அமைப்பின் இத்தகைய பிரம்மாண்ட விரிவாக்கத்திற்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது என்று சமூக ஆர்வலர்களும் நிபுணர்களும் சுட்டிக்காட்டுகின்றனர்.

சர்வதேச அளவில் பாதுகாக்கப்பட்ட விலங்கினங்களை இவ்வளவு பெரிய அளவில் தனியார் வசம் ஒப்படைப்பது மற்றும் அதற்கேற்ப உள்நாட்டுச் சட்டங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது சுற்றுச்சூழல் மற்றும் வனவிலங்கு பாதுகாப்புத் துறையில் புதிய விவாதங்களையும் விமர்சனங்களையும் கிளப்பியுள்ளது.

Exit mobile version