Home Uncategorized வட்ட செயலாளர்கள் பதவிகள் பறிப்பு?.

வட்ட செயலாளர்கள் பதவிகள் பறிப்பு?.

பெரம்பூர், ஆர்.கே.நகர் தொகுதிகளில் மூன்று வட்ட செயலாளர்களின் பதவிகளை பறித்து அதிமுகவில் அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சென்னையில் மாநகராட்சி தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நாளை மறுநாளுடன் தேர்தல் பிரசாரம் நிறைவடைகிறது.

வரும் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில் பெரம்பூர், ஆர்.கே.நகர் தொகுதிகளில் அதிமுக வட்ட செயலாளர்களின் பதவிகளை பறித்து, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் ஓபிஎஸ்- இபிஎஸ் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

உள்ளாட்சித் தேர்தலில் வேட்பாளர் தேர்வில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக சிலர் தனித்து களம் காண்கின்றனர். சிலர் எதிர் முகாம்களில் தங்களது பங்களிப்பை செலுத்த தொடங்கியுள்ளனர்.

இதனால் அதிமுக வட்ட செயலாளர்கள் நிர்வாகிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதே போன்ற நடவடிக்கை திமுகவிலும் ௭டுக்கப்பட்டுள்ளதுகுறிப்பிடத்தக்கது.

Exit mobile version