Home Uncategorized பழம்பெரும் நடிகர் ராஜேஷ் காலமானார்! சோகத்தில் திரையுலகம்!

பழம்பெரும் நடிகர் ராஜேஷ் காலமானார்! சோகத்தில் திரையுலகம்!

நடிகர் , பில்டர், ஜோதிடர், எழுத்தாளர் மற்றும் எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்திற்கு தலைவரான  ராஜேஷ்  காலமானார்

‘கன்னிப் பருவத்திலே’ படத்தின் நாயகனாக அறிமுகமானவர் நடிகர் ராஜேஷ். அதற்குப் பிறகு பல்வேறு படங்களில் நடித்தார். வெள்ளித்திரை நடிகர், டப்பிங் கலைஞர், எழுத்தாளர், சின்னத்திரை நடிகர் என அனைத்திலுமே தனது முத்திரையைப் பதித்தவர் ராஜேஷ்.

இவர் இதுவரை ஒன்பது புத்தகங்கள் எழுதியுள்ளார். முரண் சுவை அதில் ஒன்று. அது முரண்களைப் பற்றியது. ஒரு நாளிதழுக்காக அதைத் தொடராக எழுதினார். மறைந்த தலைவர் இந்திராகாந்தி விஷயத்தில் மக்களின் பாதுகாவலர்களே கொலைகாரர்களாகவும் மாறிய முரண் பற்றி எப்போதும் யோசிப்பாராம். அதை அடுத்து , ஹிட்லர், டால்ஸ்டாய், காமராஜர், செல்லம்மா பாரதி, ஐன்ஸ்டைன் என 52 வாரங்கள் பல்வேறு ஆளுமைகளைப் பற்றி எழுதி உள்ளார். உலக சிறப்பான திரைப்படங்கள், அதே போல சிறந்த இயக்குநர்கள், நடிகர்கள், நடிகை ஆட்ரே ஹெப்பர்னைப் பற்றிய புத்தகம் ஒன்று, ஜோதிடம் புரியாத புதிர் உள்ளிட்ட வேறு சில புத்தகங்களையும் எழுதி இருக்கிறார்.

Exit mobile version