இன்ஸ்டாகிராமில் விஜயை 1.46 கோடி பேர் பின் தொடர்கிறார்கள். இதன் மூலம் தமிழக அரசியல்வாதிகளில் சோசியல் மீடியாகளில் அதிக பின் தொடர்பவர்கள் வைத்திருப்பவர்களில் இவர் முதலிடத்தில் இருக்கிறார்.
சமூக வலைதளங்கள் மக்களின் வாழ்வில் ஒரு மறுக்கமுடியாத பகுதியாக மாறிவிட்டன. அரசியல்வாதிகள், நடிகர்கள், பிரபலங்கள் விளையாட்டு வீரர்கள் என அனைவரும் கணக்குகளை வைத்திருக்கின்றனர். இதனை பயன்படுத்தியே தங்களின் அன்றாட வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை வெளி உலகிற்கு தெரியப்படுத்துகின்றனர். இதில் ஒவ்வொருவரின் பயன்பாடும் வெல்வேறு விதமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களை பின் தொடர்பவர்கள் மூலம் ஒருவருக்கும் எவ்வளவு ரசிகர்கள் இருக்கின்றனர் என்பதை ஒரு யூகமாக எளிதில் கணிக்க முடியும்.
தவெக தலைவர் விஜய்:
அந்த வகையில் தமிழக அரசியல்வாதிகளில் அதிக பின் தொடர்பவர்கள் வைத்திருக்கும் பட்டியலில் தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் முதல் இடத்தில் உள்ளார். விஜய்க்கு இன்ஸ்டாகிராமில் ஒரு கோடியை 46 லட்சம், ஃபேஸ்புக்கில் 77 லட்சம், எக்ஸ் தளத்தில் 55 லட்சம் பேர் பின் தொடர்கின்றனர். ஒரே நபர் மூன்று தளங்களிலும் பின் தொடர்ந்து இருக்கக்கூடும் என்பதால், மூன்றையும் சேர்த்து சராசரியாக சுமார் 93 லட்சம் பேர் விஜய் பின் தொடர்கிறார்கள்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்:
முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு, இன்ஸ்டாகிராமில் 18 லட்சம், ஃபேஸ்புக்கில் 31 லட்சம், எக்ஸ் தளத்தில் 40 லட்சம் பேர் பின் தொடர்கிறார்கள். சராசரியாக 30 லட்சம் பேர் அவரை பின்தொடர்கிறார்கள்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி:
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு இன்ஸ்டாகிராமில் 63,000, ஃபேஸ்புக்கில் 1.68 லட்சம், எக்ஸ் தளத்தில் 6.55 லட்சம் பேர் பின் தொடர்கிறார்கள். சராசரியாக 2.95 லட்சம் பேர் பின்தொடர்கிறார்கள்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை:
பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை இன்ஸ்டாகிராமில் 15 லட்சம், ஃபேஸ்புக்கில் 5.77 லட்சம், எக்ஸ் தளத்தில் 10 லட்சம் பின் தொடர்கிறார்கள். சராசரியாக 10.25 லட்சம் பேர் பின்தொடர்கிறார்கள்.
துறை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்:
துறை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை இன்ஸ்டாகிராமில் 98,000, ஃபேஸ்புக்கில் 11 லட்சம், எக்ஸ் தளத்தில் 37 லட்சம் பேர் பின் தொடர்கின்றனர். சராசரியாக 16.25 லட்சம் பேர் அவரை பின் தொடர்கின்றனர்.
விஜய் பொறுத்தவரை அவர் ஏற்கனவே சினிமா பிரபலம் என்பதால் தமிழகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் அவரை பின் தொடர்கிறார்கள் இதனால் அவருக்கு எண்ணிக்கை சாதாரணமாகவே அதிகமாக இருக்கிறது. இதே போல் மற்ற கட்சிகள் கூட விஜய் ஒரு நடிகராக பின் தொடர்வார்கள். எனவே விஜயம் இந்த எண்ணிக்கையை ஓட்டு எண்ணிக்கை கருதக்கூடாது. எடுத்துக்காட்டாக பிரதமர் நரேந்திர மோடியை இன்ஸ்டாவில் 9 கோடி 75 லட்சம் பேர் பின் தொடர்கின்றனர். ஆனால் கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு அதைவிட அதிகமாக 27 கோடியே 30 லட்சம் பின் தொடர்பாக இருக்கின்றனர். பரப்புரையில் கூடும் கூட்டமும், பின் தொடர்பவர்கள் எண்ணிக்கையும் வாக்காக மாறுமா? என்ற கேள்வி பலரின் மனதிலும் இருக்க தான் செய்கிறது.
