Monday, May 4, 2026
Homeசெய்திகள்தேர்தல் 2026 முடிவுகள் : விஜயின் பரபரப்பான அடுத்த கட்ட நகர்வு!

தேர்தல் 2026 முடிவுகள் : விஜயின் பரபரப்பான அடுத்த கட்ட நகர்வு!

தமிழகத் தேர்தல் முடிவுகள் விறுவிறுப்பாக வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், வெற்றி பெறும் தனது கட்சி வேட்பாளர்களைப் பாதுகாப்பாகத் தக்கவைக்கத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் சோசப் விஜய் அதிரடித் திட்டங்களைத் தீட்டியுள்ளார்.

இரண்டு நாட்களுக்கு முன்பே வேட்பாளர்களிடம் பேசிய விஜய், வெற்றி பெற்ற கையோடு எந்நேரமானாலும் பனையூர் அலுவலகத்திற்கு வந்துவிட வேண்டும் என்று அன்புக்கட்டளை இட்டிருந்த நிலையில், தற்போது மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் 150 பேர் தங்கும் வகையில் ரகசிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

குதிரை பேரம் உள்ளிட்ட விவகாரங்களைத் தவிர்க்கும் பொருட்டு, வெற்றி பெறும் எம்.எல்.ஏ-க்களைச் சிதறாமல் பாதுகாப்பாக அந்த விடுதிக்கு அழைத்து வரும் முக்கியப் பொறுப்பை ஆதவ் அர்ஜுனாவிடம் விஜய் ஒப்படைத்துள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளன.

வாக்கு எண்ணிக்கை மையங்களில் இருந்து வேட்பாளர்களைப் பத்திரமாக அழைத்து வரத் தனிப் படைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதால் பனையூர் முதல் மாமல்லபுரம் வரை தவெக வினரின் நடமாட்டம் இப்போதே சூடுபிடித்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments