Sunday, March 22, 2026
HomeUncategorizedரிலீஸுக்கு காத்திருக்கும் விஜய் சேதுபதி - நித்யா மேனன் ஜோடியாக நடித்துள்ள 'தலைவன் தலைவி'

ரிலீஸுக்கு காத்திருக்கும் விஜய் சேதுபதி – நித்யா மேனன் ஜோடியாக நடித்துள்ள ‘தலைவன் தலைவி’

விஜய் சேதுபதி – நித்யா மேனன் ஜோடியாக நடித்துள்ள ‘தலைவன் தலைவி’ ரிலீஸ் ப்ளான்!

‘தலைவன் தலைவி’ படத்தின் ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி கைவசம் ‘ஏஸ், ட்ரெயின், தலைவன் தலைவி’ மற்றும் தெலுங்கு இயக்குநர் பூரி ஜெகன்நாத் படம் என நான்கு படங்கள் இருந்தது. இதில் ‘ஏஸ்’ படம் கடந்த மே 23-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது.

‘தலைவன் தலைவி’ படத்தை இயக்குநர் பாண்டிராஜ் இயக்கி வருகிறார். இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்துள்ளார். விஜய் சேதுபதியின் 52-வது படமான இதனை ‘சத்யஜோதி பிலிம்ஸ்’ நிறுவனம் தயாரித்து வருகிறது.

 

இதற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். இதன் ஷூட்டிங் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில், இப்படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது, இந்த படத்தை வருகிற ஜூலை 18-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments