தமிழகத்துல தவெக ஆட்சிப் பொறுப்பேற்ற இரண்டே வாரத்துக்குள்ள, இப்பவே 5 இடைத்தேர்தல்களை (By-polls) நோக்கி மாநில அரசியல் நகர்ந்துட்டு இருக்குறது பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது! முதலமைச்சர் விஜய் ரெண்டு தொகுதிகள்ல ஜெயிச்சுட்டு ‘திருச்சி கிழக்கு’ தொகுதியை ராஜினாமா செஞ்சதால ஏற்பட்ட ஒரு காலி இடம், அதுபோக நேத்து அதிமுகவிலிருந்து விலகி தவெக-வில் இணைந்த எம்எல்ஏக்கள் மூலமா காலியான மதுராந்தகம், பெருந்துறை, தாராபுரம் ஆகிய 3 தொகுதிகள், இன்னிக்கு மார்னிங் அம்பை இசக்கி சுப்பையா-னு மொத்தம் 5 இடங்களுக்கு இப்பவே பை-எலெக்ஷன் கன்பார்ம் ஆகியிருக்கு; வர்ற நாட்கள்ல இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாகவும் சான்ஸ் இருக்குனு பேசிக்கிறாய்ங்க.
இந்தச் சூழல்ல, ராஜினாமா செஞ்ச அதே முன்னாள் எம்எல்ஏக்களுக்குத் தவெக மீண்டும் சீட் குடுத்து களம் இறக்குமா, இல்லை தளபதி விஜய் முற்றிலும் புதிய முகங்களை அங்கே வேட்பாளர்களா நிறுத்துவாரா அப்படின்ற எதிர்பார்ப்பு ஒருபக்கம் எகிறியிருக்கு; இப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் காரணம் எதுவும் சொல்லாமல் ராஜினாமா செய்தால் மீண்டும் நடத்தப்படும் இடைத் தேர்தலுக்கான மொத்த செலவு எவ்வளவு ஆகும்..
அதைவிடப் பெரிய ஆர்வம் என்னன்னா, இந்த இடைத்தேர்தல்ல எதிர்க்கட்சிகளான திமுக மற்றும் அதிமுகவோட வியூகமும், பிரச்சார பாணியும் எப்படி இருக்கப் போகுது என்பதுதான். இந்த எலெக்ஷன்ஸ் பலமுனைப் போட்டி கொண்ட அதிரடி ஆட்டமா மாறப்போகுதா, இல்ல எதிர்க்கட்சிகள் எதாவது தேர்தலைப் புறக்கணிக்கப் போறாங்களா, அல்லது தவெக-வை வீழ்த்த எதிர்க்கட்சிகளுக்குள்ள தொகுதி வாரியா ரகசிய அண்டர்ஸ்டாண்டிங் ஏதாச்சும் உருவாகுமான்னு கோட்டை வட்டாரத்திலும் சோசியல் மீடியாவிலும் நெட்டிசன்கள் செம ஹாட்டா விவாதிக்க ஆரம்பிச்சுட்டாய்ங்க!
