அமெரிக்காவில் படித்துக்கொண்டிருக்கும், அல்லது படிக்கச் செல்ல நினைக்கும் இந்திய மாணவர்களுக்கு ஒரு மிக முக்கியமான எச்சரிக்கை! அமெரிக்கத் தூதரகம் (US Embassy) இப்போது ஒரு கடுமையான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. “எங்கள் நாட்டுச் சட்டங்களை மீறினாலோ, அல்லது கைது செய்யப்பட்டாலோ, உங்கள் விசா உடனடியாக ரத்து செய்யப்படும்” என்று அதிரடியாகத் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் உள்ள அமெரிக்கத் தூதரகம் தனது எக்ஸ் (X) தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இந்த எச்சரிக்கையைத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது. மாணவர்கள் மட்டுமல்ல, H-1B மற்றும் H-4 விசா மூலம் வேலைக்குச் செல்பவர்களுக்கும் இது பொருந்தும். “அமெரிக்கச் சட்டங்களை உடைப்பது உங்கள் விசாவுக்கு மிகப்பெரிய ஆபத்தை விளைவிக்கும். அப்படி ஏதாவது நடந்தால், நீங்கள் உடனடியாக நாடு கடத்தப்படுவீர்கள் (Deported). அதுமட்டுமல்ல, எதிர்காலத்தில் நீங்கள் அமெரிக்காவுக்கு விசா விண்ணப்பிக்கவே தகுதியற்றவர் ஆகிவிடுவீர்கள்” என்று எச்சரித்துள்ளது.

