Home வணிகம் சாதாரண மக்களை அதிகம் தாக்கப்போகும் பொருளாதார மந்தநிலை!

சாதாரண மக்களை அதிகம் தாக்கப்போகும் பொருளாதார மந்தநிலை!

நாட்டின் பொருளாதாரச் சூழலில் ஏற்படவிருக்கும் பெரும் மந்தநிலை மற்றும் நிதி நெருக்கடி குறித்த எச்சரிக்கை சமிக்ஞைகள் தற்போதே ஆங்காங்கே வெளிப்படத் தொடங்கியுள்ளன.

ஒட்டுமொத்த தேசத்தையும் தாக்கவிருக்கும் இந்த மாபெரும் பொருளாதாரப் புயலானது அதானி, அம்பானி போன்ற பெரும் கோடீஸ்வரர்களையோ அல்லது அதிகார வர்க்கத்தையோ பெரிதாகப் பாதிக்கப் போவதில்லை; மாறாக, அடுத்த ஆறு முதல் பன்னிரண்டு மாதங்களில் சாமானிய இளைஞர்கள், நடுத்தரத் தொழிலாளர்கள் மற்றும் சிறு வணிகர்களின் வாழ்வாதாரத்தைத்தான் இது நிலைகுலையச் செய்யப்போகிறது.

தற்போதைய சூழலில் விவசாய உரம் உற்பத்தி சரிவைச் சந்தித்துள்ளதால், அது நேரடியாக உணவு உற்பத்தியைக் கடுமையாகப் பாதித்து, அத்தியாவசியக் காய்கறிகள் மற்றும் மளிகைப் பொருட்களின் விலையை விண்ணைத் தொடச் செய்யும் அபாயம் உள்ளது.

அதேபோல் பெட்ரோல் மற்றும் சமையல் எரிவாயு (LPG) இருப்பு குறைந்து வருவதால், வரும் நாட்களில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு உணவகங்கள் பெரும் நெருக்கடிக்குள்ளாகும்; எனவே, மக்கள் வெளியில் உண்பதைத் தவிர்ப்பதும், தேவையற்ற வெளிநாட்டுப் பயணங்களைத் தள்ளிப்போடுவதும் புத்திசாலித்தனமாகும். எதிர்காலப் பாதுகாப்பு கருதி, குறைந்தபட்சம் மூன்று மாத சம்பளத்தையாவது அவசரத் தேவைக்காகக் கையிருப்பில் வைத்திருக்க வேண்டும்.

இந்த நிதி ஆண்டில் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) மற்றும் பொருளாதார வளர்ச்சி வீழ்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுவதால், வளைகுடா நாடுகளில் பணிபுரியும் பலருக்கு வேலைவாய்ப்பு பறிபோகும் சூழலும் உருவாகலாம். குறிப்பாக, அன்றாட உழைப்பை நம்பியிருக்கும் விநியோகப் பிரிவு ஊழியர்களே (Gig workers) இதனால் அதிகம் பாதிக்கப்படுவர்; தற்கால ‘ஜென் ஜி’ (Gen Z) இளைஞர்கள் காட்டும் அலட்சியப் போக்கு மாறி, வாழ்வாதாரத்தை எப்படிக் தக்கவைப்பது என்பதே அவர்களுக்குப் பெரும் சவாலாக மாறும். ஆன்லைன் டெலிவரி நிறுவனங்களில் ஆர்டர்கள் பாதியாகக் குறையும் போது பெருமளவிலான ஆட்குறைப்பு நடவடிக்கை அரங்கேறும்.

மேலும், வேலைவாய்ப்புச் சந்தையில் இருந்து பெண்கள் அதிக அளவில் வெளியேற்றப்படும் கட்டாயம் ஏற்படுவதால், அவர்கள் மீண்டும் தங்களின் பொருளாதாரச் சுதந்திரத்தை மீட்டெடுக்க இன்னும் பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருக்கும் என்பதால் இப்போதே உஷாராக இருப்பது நல்லது.

Exit mobile version