தமிழகத்தில் 3 நகரங்களில் நேற்று வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி பதிவாகி இருக்கிறது. ஈரோடு, நாமக்கல், சேலம் ஆகிய 3 நகரங்களில் தலா 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. கரூர் பரமத்தியில் 99.5 பாரன்ஹீட் டிகிரி பதிவானது. சென்னை நுங்கம்பாக்கத்தில் 90 டிகிரி பாரன்ஹீட் பதிவானது.
இந்நிலையில் தமிழகத்தில் இனி வரும் காலங்களில் அதிக அளவில் வெப்பம் அதிகரிக்கும் என்பதால் அதை எதிர்கொள்ள வழிகாட்டு நெறிமுறைகளை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
வழிகாட்டு நெறிமுறைகள்:
பொது மக்கள் மதியம் 12 மணி முதல் மாலை 3 மணி வரை வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்.
குழந்தைகள், வயதானோர், கர்ப்பிணிகள் முடிந்தவரை வீடுகளுக்குளே இருக்க அறிவுத்தப்படுகிறார்கள்.
உடல் சூடு, தோலில் எரிச்சல், வாந்தி, மயக்கம், தலைவலி ஏற்பட்டல் மருத்துவர்களை அணிகி சிகிச்சை பெற வேண்டும்.
வெயிலில் செல்ல வேண்டியுருந்தால் குடை, உடல் முழுவதும் மறைக்கும் பருத்தி ஆடைகளை பயன்படுத்த வேண்டும்.
அதீத வெப்பதால் ஏற்படும் பக்கவாதம், இறப்பு ஆகியவை தினசரி பதிவேற்றம் செய்ய வேண்டும் என மாவட்ட நிர்வாகங்களுக்கு சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
