வாழைப்பழம் உடலுக்கு நல்லது தான். ஆனால், அதையே அதிகமாக உட்கொண்டால் பல பிரச்சனைகள் உடலில் ஏற்படும். அதை தான் நம் முன்னோர்கள் “அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு” என்று கூறியிருந்தனர். எந்த ஒரு பொருளாக இருந்தாலும் அளவோடு உட்கொண்டால் மட்டுமே அதன் பயன்கள் நம் உடலுக்கு சரியான விதத்தில் சேரும். இல்லை என்றால் உடலுக்கு உபாதைகளையே கொடுக்கும்.
அந்த வகையில் நாள் ஒன்றுக்கு எத்தனை வாழைப்பழங்கள் சாப்பிடலாம்? உடலுக்கு என்னென்ன நன்மைகள் வாழைப்பழம் கொடுக்கின்றன? என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
வாழைப்பழம் ஊட்டச்சத்து மிக்கதாகவே இருந்தாலும் அதனை அளவோடு தான் உட்கொள்ள வேண்டும். ஆரோக்கியமான நபர் தினமும் ஒன்று அல்லது இரண்டு வாழைப்பழம் சாப்பிட்டாலே போதுமானது. ஏனெனில் வாழைப்பழத்தில் கார்போஹைட்ரேட் மற்றும் சக்கரை அதிகமாகவே உள்ளன.
உடல் எடை அதிகரிப்பு ரத்தத்தில் சர்க்கரை அளவில் ஏற்ற இறக்கங்களை தவிர்க்க மிதமான அளவு சாப்பிடுவதே மிகவும் முக்கியமானதாகும். அதனை அதிகமாக உட்கொள்ளும் பொழுது அதில் இருக்கும் நார்ச்சத்து காரணமாக வயிறு உப்பசம் அல்லது வயிற்றுப் போக்கு போன்ற பிரச்சனைகள் வர வாய்ப்பு உண்டு.
வாழைப்பழத்தில் இருக்கும் பொட்டாசியம் இதயத்திற்கு நலம் சேர்க்கும் ரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்க உதவும் இதயம் அதிகம் வேலை செய்ய வேண்டி இருக்காது.
புகைப்பிடிக்கும் பழக்கத்தை நிறுத்த முயற்சிக்கிறீர்களா? வாழைப்பழங்கள் உதவும். அதில் இருக்கும் வைட்டமின் மற்றும் தாதுக்களின் கலவையானது நிக்கோட்டின் ஏற்படுத்தும் ஏக்கங்களை குறைக்க உதவும்.
பகலில் சோர்வாக உணர்ந்தால் உடலில் இரும்புச் சத்து குறைவாக இருக்கலாம். வாழைப்பழத்தில் இருக்கும் இரும்புச்சத்து உடலில் அதிக ரத்த சிவப்பணுக்களை உருவாக்க உதவும். ரத்த சோகையை எதிர்த்து போராடவும் வித்திடும்.
மன அழுத்தமாகவோ, சோகமாகவோ உணர்ந்தால் வாழைப்பழத்தில் இருக்கும் வைட்டமின் பி6, செரோடோனின் மற்றும் டோபமைன் என்ற நல்ல ரசாயனங்களை உற்பத்தி செய்ய மூளையை ஊக்கப்படுத்து.ம் எனவே பரபரப்பாக இருக்கும் பொழுது வாழைப்பழம் சாப்பிடுவது மனதை அமைதிபடுத்தவும், கடினமான தருணங்களை நிர்வகிக்கவும் உதவிடும். வாழைப்பழத்தில் இருக்கும் இயற்கையான சர்க்கரை உடலுக்கு தேவையான ஆற்றலை அளிக்கும்.
உடலுக்கு பல நன்மைகளை தரக்கூடிய வாழைப்பழத்தை அளவோடு உட்கொண்டு உடல் ஆரோக்கியம் பெறலாம்.
