Tuesday, March 24, 2026
HomeUncategorizedதினமும் 1 டம்ளர் மோர் குடிப்பதால் எவ்ளோ நன்மைகள் இருக்கு தெரியுமா?

தினமும் 1 டம்ளர் மோர் குடிப்பதால் எவ்ளோ நன்மைகள் இருக்கு தெரியுமா?

நம் தமிழர் பண்பாட்டில் உணவு முறைகளில் மோருக்கு மிக முக்கியத்துவம் உள்ளது. தங்களின் அன்றாட வாழ்க்கையில் மோரை அற்புதமான உணவுப் பொருளாக பயன்படுத்தி வந்தார்கள். எளிதில் கிடைக்கக்கூடிய எனர்ஜி ட்ரிங்க் ஆகவும் பயன்படுத்தினர். ஒரு குடும்பத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மோரினை தங்கள் உணவாக எடுத்துக்கொண்டு பலவிதமான நோய்களிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொண்டனர். அந்த வகையில் இப்பதிவில் நாம் மோரின் மருத்துவ குணத்தை பார்ப்போம்.

 கோடை காலங்களில் வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதால் உடலில் உள்ள சக்தி குறைந்து சோர்ந்து போகும் தருவாயில் ஒரு டம்ளர் மோர் குடித்தீர்கள் என்றால் உங்களுக்கு உடலில் மிகப்பெரிய சக்தி கிடைக்கும். இது அனைவருக்கும் தெரிந்த உண்மைதான்  இருந்தாலும் இன்றைய காலகட்டத்தில் நாம் மோரின் பயன்பாட்டை குறைத்ததால் நாம் எதிர்கொள்ளும் நோய்கள் எண்ணற்றவை.

 தினமும் ஒரு டம்ளர் மோர் கொடுத்தால் கிடைக்கும் நன்மைகள் 

  • உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தையும் உற்சாகத்தையும் தந்து ஆரோக்கியம் அதிகரிக்கும்.
  • உடல் சூட்டை தணித்து உடலுக்கு தேவையான ஈரப்பதத்தை தந்து முடிகளுக்கும் தோல்களுக்கும் நன்மை தருகின்றது.
  • மோரில் அதிகப்படியான கால்சியம் சத்து இருப்பதால் எலும்புகளுக்கு வலுவை சேர்க்கும். வளரும் குழந்தைகளுக்கு தினமும் மோர் உணவாக கொடுத்தால் அவர்கள் ஆரோக்கியமாக வளர இந்த கால்சியம் சத்து உறுதியாக இருக்கும். வயதான ஆண் மற்றும்  பெண்களுக்கு  மற்றும் மூட்டு தேய்மான நோய்கள் வராமல் தடுக்கும்.
  • நெஞ்செரிச்சல் வயர் உப்பசம் புளித்த ஏப்பம் போன்ற ஜீனர் கோளாறு சரி செய்யும்.
  • ஜீரண மண்டலத்தில் உள்ள கெட்ட கழிவுகளை வெளியேற்றி ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
  • உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் தினமும் மோரை உணவில் சேர்த்து வந்தால் அவர்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும். உடலுக்கு தேவையான புரதமும் தினசரி கிடைக்கும்.
  • முடி உதிர்வு தொல்லை இருப்பவர்கள் மோரில் கருவேப்பிலையை அரைத்து குடித்து வந்தால் உடல் சூடு குறைந்து முடி நன்றாக வளர்ந்து அடர்த்தியாகும்.
  • கல்லீரல் பிரச்சனை நோய் உள்ளவர்கள் மோரை தினமும் குடித்து வந்தால் அவர்களின் கல்லீரலின் திறன் அதிகரித்து ஆரோக்கியம் பெறுவார்.

 நம் உடலுக்கும் மனதிற்கும் நன்மை தரக்கூடிய எளிய உணவாக இருக்கும் மோரை நாம் தினமும் குடித்து வந்தால் எண்ணற்ற நோய்களிலிருந்து நாம் நம் உடலை பாதுகாத்துக் கொள்ளலாம். கிடைக்கக்கூடிய குளிர்பானங்களையும் குளிரூட்டிகளையும்  குடித்து உடலை கெடுத்துக் கொள்வதற்கு பதிலாக நன்மை தரக்கூடிய மோர் இளநீர் நன்னாரி சர்பத் எலுமிச்சை தண்ணீர் கற்றாழை சாறு போன்ற இயற்கையான  உணவுகளை வெயில் காலத்தில் பயன்படுத்தி நன்மை பெறுவோம்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments