Thursday, May 7, 2026
Homeசெய்திகள்ஆட்சியை கைப்பற்றுமா தவெக? ஆளுநரை மீண்டும் சந்திக்கும் விஜய்!

ஆட்சியை கைப்பற்றுமா தவெக? ஆளுநரை மீண்டும் சந்திக்கும் விஜய்!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், இன்று (மே 7, 2026) காலை 11 மணிக்கு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரைச் சந்திக்க உள்ளார்.

நேற்று மாலை ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரிய நிலையில், இன்று மீண்டும் ஒரு முக்கிய சந்திப்பு நிகழ உள்ளது. 5 இடங்களைக் கொண்டுள்ள காங்கிரஸ் கட்சி ஏற்கனவே தனது முழு ஆதரவை டிவிகே-விற்கு வழங்கியுள்ளதால், அக்கட்சியின் பலம் 113-ஆக உயர்ந்துள்ளது.

இருப்பினும், ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்களை எட்ட இன்னும் 5 இடங்கள் தேவைப்படுவதால், ஆளுநரின் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments