Tuesday, June 23, 2026
Homeசெய்திகள்‘சிங்கப்பெண்’ அதிரடிப்படைக்கு பிரத்யேக உதவி எண்: 1091 அறிவிப்பு!

‘சிங்கப்பெண்’ அதிரடிப்படைக்கு பிரத்யேக உதவி எண்: 1091 அறிவிப்பு!

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுத்து, அவர்களுக்கு உரிய பாதுகாப்பை முழுமையாக உறுதி செய்யும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள ‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படைக்கான பிரத்யேகத் தொலைபேசி எண் ‘1091’ என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அவசர உதவி எண்ணானது, ஏற்கனவே பொதுமக்களின் பயன்பாட்டில் இருந்து வரும் அவசர கால உதவி எண்ணான ‘112’ உடன் முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், ஆபத்தான சூழலில் இருக்கும் பெண்களும் குழந்தைகளும் இந்த எண்களைத் தொடர்பு கொள்ளும்போது, ‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படையினர் உடனடியாகக் களமிறங்கி உரிய பாதுகாப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகளை உடனுக்குடன் மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments