Home Uncategorized ”யானை” – மு.பழனிவாசன் ( பகுதி 2)

”யானை” – மு.பழனிவாசன் ( பகுதி 2)

(யானையைப் பற்றிய முந்தைய கட்டுரையில், அதன் மூதாதை இனமான ”மமூத்” முதல் நம் தமிழகத்தின் சங்ககாலத்தில் யானையின் பெருமைகள் வரை பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக…)

மன்னர்களும் யானைகளும்:

    “உலகமகாவீரன் என்று சொல்லப்பட்டுஇந்தியாவின் வடமேற்குப்பகுதிவழியாக ஊடுருவியகிரேக்க நாட்டு மன்னன் அலெக்ஸாண்டர்” தன் படையெடுப்பின்போது போர்க்களத்தில் இந்திய மன்னர்களின் யானைப்படையை கண்டு அஞ்சினான் என்பது வரலாறுஎப்படி ஆடுகள்மாடுகள்குதிரைகள்” ஆகியன ஒரு மன்னனுக்கு வளமோ அதனினும் மேலாக யானைப்படை கூட சிறந்த வளமாகவும்பலமாகவும்கெளரவமாகவும் யானைகள் விளங்கியுள்ளன.

    தமிழகத்தில் சோழர்கள் காலத்தில் யானைப்படை” பெரும் பங்களிப்பு நிக்ழத்தியுள்ளதுமாமன்னன் ராஜராஜசோழனின் ஆணைக்கிணங்க இமயம் வரை படை நடத்திச்சென்ற அவனது மகன் ராஜேந்திர சோழன் இமயம் வரை சென்று வெற்றிக்கொடி நாட்டியுள்ளான்அவன் கடல் கடந்து சென்று இன்றைய தாய்லாந்துவியட்நாம்இந்தோனேஷியா போன்ற நாடுகளை வென்று சோழர்களின் சாம்ராஜ்ஜியத்தை விரிவுபடுத்தினான் என்கிறது வரலாறுஅவன் அவ்வாறு படைகளை கப்பல்களில் அழைத்துச்செல்லும்போதுதன் கூடவே பலநூறு யானைகளையும் ஏற்றிஅவற்றிற்கான உணவு வகைகளையும் கொண்டு சென்றதோடு மட்டுமின்றிஅவை பெருங்கடலின் சீற்றத்தினைக்கண்டு அஞ்சாமலும்அவற்றிற்கு மதம் பிடிக்காமலும் பார்த்துக்கொண்டு போரில் வெற்றி பெற்று மீண்டும் தாய்த்தமிழகத்திற்கு திரும்பியிருப்பான் என்று கற்பனை செய்துகூட பார்க்க முடியவில்லை!

 

    தமிழகத்தின் சேரபாண்டிய பல்லவ மன்னர்களும்கூட யானையை கெளரவித்துஅவற்றை பேணிப்பாதுகாத்திருக்கின்றனர் என்பதும் கண்கூடு.

யானைகளும் கோவில்களும்:

    ஆன்மீகத்துடன் கணித அறிவியலும் தொடர்புடைய ஜோதிட சாஸ்திரம்” ஒரு கட்டத்தில் எழுச்சியுற்றபோதுஒருவரின் ஜாதகத்தில் கஜகேசரி யோகம்” என்கிற ஒன்று பிரதானமாக விளங்கியதுஇன்றும் கூட அது நடைமுறையில் இருந்து வருகிறதுஅதாவது யானைகள் கூட்டத்தில் ஒரு சிங்கம்போன்று” என்று குறிப்பிடப்படுகிறதுஇதற்கென யாகங்களும் பூஜைகளும் செய்யப்படுகிற வழக்கங்கள் உருவாகியுள்ளனஇதன் அடிப்படையில் இந்த யோஒகம் வலுவாக இருப்பவர்கள் கோவில்களுக்கு யானைகளை தானமாக வழங்குவதும் உண்டுதமிழ்த்திரையுலகின் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் தஞ்சைதிருவானைக்காவல் உள்ளிட்ட பல கோவில்களுக்கு யானைகளை தானமாக வழங்கியுள்ளார்அன்னதானம்வஸ்திர தானம்கோ தானம் போன்றவைற்றைப்போலவே கஜ (யானை)தானமும் விசேஷமானதுபோரில் யானைப்படை பயன்படுத்தப்பட்டபோதும்பொதுவாக அக்காலத்தில் பிரமாண்டமான கோவில்களின் கட்டுமானங்கள்பிற கட்டுமானங்கள்உழவுகோவில் பூஜைகள் போன்றவற்றிற்காக யானைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

யானைகளின் குடும்பப்பாசம்:

மிருகங்களும் மனிதர்களைப்போலவே குடும்ப உறவின் முக்கியத்துவத்தை பேணிக்காப்பவையாகும்பருவ்வயதின் காதலிலும் சரிகுட்டியை ஈன்றெடுத்து அவற்றின் நன்மைக்காக தன்வாழ்வை அர்ப்பணித்து கண்காணித்தல்பிற விலங்குகளின் தாக்குதல்களில் இருந்து காத்தல்போன்ற அனைத்து செயல்களிலும் பிற விலங்கினங்களைவிட யானை இனம் ஒருபடி மேலேதான்தனது ஜோடியான பெண் யானை இறந்து விட்டால் அதனுடைய ஆண் யானை சாப்பிடாமல் உடல் மெலிந்துவிடும்பெண் யானையால் தண்ணீர் குடிக்க வர முடியாவிட்டால் ஆண் யானை தும்பிக்கையால் நீரை உறிஞ்சி பெண் யானைக்கு கொண்டுபோய் கொடுக்கும்கருவுற்று இருக்கிற பெண் யானையால் உணவைத் தேடி வெளியே செல்ல முடியாதுஅது போன்ற நேரத்தில் ஆண் யானை உணவுகளை சேகரித்து எடுத்துவந்து ஊட்டும்பெண் யானை மீது ஆண் யானை அந்த அளவுக்கு அன்பு செலுத் தும்ஒருபோதும் யானைகள்தன் இனத்தை (கூட்டத்தைவிட்டுக் கொடுக்காது.

தன்வாழ்நாளில் தன் எதிரி என எண்ணம் கொண்டுவிட்டால் அந்த எதிரியை அழிக்கின்ற வரைக்கும் தன் எண்ணத்தை மறக்காதுஎதிரியை அழிக்க நினைத்தால் தூக்கத்தில்கூட அதைப் பற்றிய சிந்தனையில் இருக்கும் என்று புறநானூறில் கூறப்பட்டுள்ளது.

தற்போது காடுகளை அழித்து நகரங்கள் உருவாக்கப்படுவதால் தாவர உண்ணிகளான யானைகளுக்கு உணவுகள் கிடைப்பது அரியதாகிறதுமனிதர்களின் வேளாண்மை விரிவாக்கத்திற்காக யானைகளின் வாழிடங்களான காடுகளை அழித்து வருகின்றனர்.  காடுகளில் வாழ்ந்து வரக் கூடிய யானைகள் எங்கே செல்வது எனத் தெரியாமல் காடுகளாய் இருந்து மாற்றிய விவசாய நிலங்களை அழிக்கிறது.  மனிதர்களையும் முரட்டுத்தனமாகத் தாக்குகிறதுஇதனால் மனிதர்களால் யானைகள் கொல்லப்படுகின்றன.  யானைகளின் வாழிடத்தை மனிதர்கள் ஆக்கிரமிக்கும் போது யானைகள் எங்கு செல்லும்?

  இவ்வாறான யானைகளுக்கும் மனிதர்களுக்கும் உள்ள முரண்பாடுகளால் ஆண்றொன்றுக்கு 150 யானைகளும், 100 மனிதர்களும் இறப்பதாக ஆய்வு கூறுகின்றதுயானைகள் தனக்குத் தேவையான செடிகொடிபட்டை போன்ற தாவரகள் கிடைக்கப்பெறாததால் தான் ஊருக்குள் வந்து விளை நிலங்களில் உள்ள பயிர்களை உண்டும் நாசப்படுத்தியும் விடுகின்றன ன்பதை அறியலாம்.

விலங்கு இனங்களில் யானையின் மூளையே பெரியதாகும்.  யானைகள் நினைவாற்றல் திறன் அதிகம் கொண்டது.  அவை மட்டுமல்லாமல் யானையினுடைய கண்கள் சிறியவையாக இருப்பதால் கிட்டப்பார்வையைக் கொண்டதுஅதனால் கேட்கும் திறனையும்மோப்பத் திறனையும் அதிகமாகப் பெற்றுள்ளன.

பொதுவாக பெரிய யானைக்கு நாளொன்றுக்கு 150–200 கிலோ உணவும், 100–150 லிட்டர் வரை தண்ணீர் தேவைப்படுகிறது.

பெண் யானைகள் 2 ஆண்டுகள் கர்ப்பமாக இருக்கும் – அனைத்து பாலூட்டிகளிலும் மிக நீண்ட கர்ப்ப காலம்ஒரு குட்டி யானை இருப்பதும் சிறிய கடமை அல்லயானை பிறக்கும்போது எடை 120 கிலோபொதுவா ஒரு யானைஅதனுடைய மொத்த எடையில் 5 சதவீதம் அளவுக்கு தினசரி உணவு உட்கொள்ளும்பிறக்கும் யானை 100 கிலோ இருந்தால், 5 கிலோ உணவைச் சாப்பிடுகின்றன.

Exit mobile version