மமூத்:
யானை ஒரு காட்டுவிலங்காக அறியப்பட்டாலும், வரலாற்றின் தொடக்ககாலம் முதலே அது மனிதகுலத்திற்கு மிகவும் நெருக்கமான தோழமைமிகுந்த உயிரினமாகவே விளங்கி வருகிறது என்பதை நாம் நன்கறிவோம்.
பல ஆண்டுகளுக்கும் முன்னர் “மாமூத்” என்கிற இனம் தற்போதைய யானை குடும்பத்தின் முன்னோடியாக (எலிபண்டா குடும்பம்) சொல்லப்படுகிறது.
மாமூத் இனம் தற்போதைய யானைகளை விட நினைத்துப் பார்க்கவே திகிலூட்டும் தோற்றத்துடன் இருந்திருக்கின்றன என்பது ஆங்காங்கு கிடைக்கப்பெற்ற படிமங்களை ஆய்வு செய்த வல்லுனர்களின் தரவுகளின் மூலம் அறியமுடிகிறது. அவ்வாறு கிடைக்கபெற்ற படிமங்களில் தற்போதைய சீனாவின் முக்கியமான “சேங்குவா” நதிக்கரை
சேங்குவா நதிக்கரையில் கிடைக்கப்பெற்ற மாமூத்தின் படிமமானது, உயரம் 4.7 மீட்டர்,
பூமிப்பந்தில் உள்ள ஏழுகண்டங்களில் ஆப்பிரிக்க கண்டம் மற்றும் ஆசிய கண்டங்களிலும் மட்டுமே தற்போது யானைகள் உயிர் வாழ்கின்றன. இவ்விரண்டில் ஆப்பிரிக்க கண்டத்தில் வாழும் யானைகளை விட, ஆசிய கண்டத்தில் உள்ள நாடுகளில் வாழும் யானைகள் பிரமாண்டத்தில் இரண்டாம் இடத்தையும், பேரழகில் முதலிடத்தையும் பிடிக்கின்றன. அதேபோல் பெரும்பாலும் காட்டுவிலங்காக மட்டுமே ஆப்பிரிக்க யானைகள் வாழ்கின்றன. அவை மனிதர்களின் வாழ்வியலோடு பின்னிப்பிணைந்தவை அல்ல. ஆனால், ஆசிய யானைகள் அப்படியல்ல. இந்தியா, நேபாளம்,
யானையின் பரவலாக்கம்:
நமது புராண, இதிகாசங்கள், தெய்வீக வரலாறு போன்றவை, தொன்றுதொட்ட மன்னராட்சி காலம்முதல் இன்றைய மக்களாட்சி காலம் வரையிலும் தொடரும் யானைக்கும் மனிதர்களுக்குமான உறவி பெருமை அளப்பரியது.
சனாதன கடவுளர்களில் “இந்திரன்” (தேவர்களின் தலைவன்) எனப்படும் தெய்வத்தின் வாகனம் “ஐராவத யானை”. முருககடவுள் சூரனை வதம் செய்ததும், தனது மகள் தேவானையை முருகனுக்கு திருமணம் செய்வித்தபோது, அவருக்கு தன் வாகனமான ஐராவத யானையை மணமகள் வீட்டு சீதனமாக தந்ததாக குறிப்புகள் உண்டு. முருககடவுளின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணி திருத்தலத்தில் முருகனனின் வாகனம் மயில் அல்ல. இந்த ஐராவத யானையே.
தமிழ்கூறும் நல்லுலகின் ஆகச்சிறந்த பெருமையான சங்க இலக்கியப்பாடல்களான அகநானூறு, புறநானூறு, நற்றிணை போன்ற எண்ணற்ற நூல்களில் யானையைப் பற்றிய செய்திகள் பரவலாக உண்டு. அவை யானையின் வீரம், திறம் ஆகியவற்றினை மட்டும் பாடாமல் அவற்றின் பண்புநலன்களை மேற்கோள்காட்டி பெருமைப் பட்டிருக்கின்றன.
சங்ககாலத்தமிழகத்தில், ஒரு நாட்டின் மன்னனின் வீரம், பண்பு, செல்வச்செழிப்பு மட்டுமின்றி அந்நாட்டின் வளமையை, மக்களின் மேன்மையை, அம்மன்னனின் சாதனைகளைப்பற்றி செந்தமிழ்ச் செய்யுள்களால் பாடி, பரிசில் பெறுவது தமிழ்ப்புலவர்களின் வழக்கம். அவ்வாறு பாடியமைக்காக அந்த புலவர்களுக்கு யானைகள் கூட பரிசளிக்கப்பட்டதாக இலக்கியக் குறிப்புகளைக் காண்கிறோம். இவை மட்டுமா? மதுரை மீனாட்சியின் அர
