கேரள மாநிலம் பாலக்காடு அருகே காட்டு யானை தாக்கியதில் மாத்ருபூமி செய்தி சேனலின் ஒளிப்பதிவாளர் ஏவி முகேஷ் (வயது 34) பரிதாபமாக உயிரிழந்தார்.
பாலக்காட்டில் உள்ள கொட்டேகாட்டில் காட்டு யானைகளின் காட்சிகளை படமாக்கிக் கொண்டிருந்த போது இந்த விபத்து ஏற்பட்டது. இந்த இடத்தில் அடிக்கடி காட்டு விலங்குகள் தாக்குதல் நடப்பதுண்டாம்
யானைகள் ஆற்றைக் கடக்கும் காட்சிகளை முகேஷ் படமெடுத்துக் கொண்டிருந்த போது திடீரென யானை ஒன்று துடிதுடித்து அவரை நோக்கி ஓடத் தொடங்கியது. யானையிடம் இருந்து தப்பிக்க முயன்றபோது, கீழே விழுந்ததால் யானை அவரை பலமாக தாக்கியது.
பலத்த காயம் அடைந்தவர் பாலக்காடு மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்
