Home டிஜிட்டல் யூடியூப் AI தொழில்நுட்பத்தின் மூலம் வழங்கும் பிளேலிஸ்ட்!

யூடியூப் AI தொழில்நுட்பத்தின் மூலம் வழங்கும் பிளேலிஸ்ட்!

யூடியூப் நிறுவனம் தனது பிரீமியம் சந்தாதாரர்களுக்காக (Premium Subscribers) செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் மூலம் பிளேலிஸ்ட்டுகளை உருவாக்கும் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

கூகுளின் ‘ஜெமினி’ (Gemini) ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திச் செயல்படும் இந்த வசதியின் மூலம், பயனர்கள் தங்களுக்குப் பிடித்தமான பாடல்கள், இசை வகை அல்லது தற்போதைய மனநிலை (Mood) ஆகியவற்றைத் தட்டச்சு செய்தோ அல்லது குரல் வழியாகவோ (Voice prompt) கூறினால் போதும்; அதற்கேற்றவாறு ஒரு பிரத்யேக பிளேலிஸ்ட்டை ஏஐ தானாகவே உருவாக்கித் தரும்.

தற்போது ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் தளங்களில் ‘யூடியூப் மியூசிக்’ (YouTube Music) செயலியில் அறிமுகமாகியுள்ள இந்த அம்சம், பயனர்கள் பாடல்களைத் தேடித் தொகுக்கும் நேரத்தைக் குறைப்பதோடு, அவர்களின் ரசனைக்கு ஏற்ற புதிய இசை அனுபவத்தையும் வழங்கும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Exit mobile version