வந்தே மாதரம் பாடல் இசைக்கப்படுவதற்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் புதன்கிழமை காலை வெளியிட்டுள்ளது.
அதில் தெரிவித்திருப்பதாவது:
🇮🇳அரசு நிகழ்ச்சிகள் மற்றும் பள்ளிகளில் தேசிய கீதத்துக்கு முன்னதாக வந்தே மாதரம் பாடலின் 6 பத்திகளையும் கட்டாயம் பாட அல்லது ஒலிக்கப்பட வேண்டும்.
🇮🇳பாடல் இசைக்கப்படும் நேரம் தோராயமாக 3 நிமிடங்கள் 10 விநாடிகள் ஆகும்.
🇮🇳குடியரசுத் தலைவர், ஆளுநர் உள்ளிட்டோர் பங்கேற்கும் அனைத்து அரசு நிகழ்ச்சிகளின் தொடக்கத்திலும், முடிவிலும் வந்தே மாதரம் பாடல் ஒலிக்கப்பட வேண்டும்.
🇮🇳அகில இந்திய வானொலி மற்றும் தொலைக்காட்சி மூலம் குடியரசுத் தலைவர் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவதற்கு முன்னும் பின்னும் ஒலிக்கப்பட வேண்டும்.
🇮🇳அதிகாரப்பூர்வ பதிப்பை மட்டுமே பாட அல்லது ஒலிக்கப்பட வேண்டும்.
🇮🇳தேசியப் பாடலான வந்தே மாதரம் இசைக்கப்படும் போது அனைவரும் எழுந்து நிற்க வேண்டும்.
https://www.facebook.com/share/p/1DuJSQkzDt
