தமிழக வெற்றி கழகம் சார்பில் கல்வி விருது வழங்கும் விழா இரண்டாவது கட்டமாக இன்று மாமல்லபுரத்தில் நடைபெற்று வருகின்றது. இந்த விழாவில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த 84 தொகுதிகளை சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு விஜய் ஊக்கத்தொகை, பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கி கௌரவிக்கின்றார். இந்த பணியை கடந்த இரண்டு வருடங்களாக வெற்றிகரமாக செய்து வந்துள்ள நிலையில், இது மூன்றாவது வருடமாக தொடர்கிறது.
கல்வி விருது வழங்கும் விழா முதற்கட்டமாக கடந்த 30ஆம் தேதி நடந்து முடிந்த நிலையில், இன்று இரண்டாவது கட்டமாக பரிசு வழங்கும் விழா நடைபெற்று வருகின்றது. இதில் ராமநாதபுரம், ஈரோடு, கரூர், தஞ்சாவூர், தர்மபுரி, திருச்சி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருப்பூர், திருவாரூர், மயிலாடுதுறை, விருதுநகர் மற்றும் புதுச்சேரி பகுதிகளைச் சேர்ந்த மாணவ மாணவியர்களுக்கு பரிசு வழங்குகிறார் விஜய்
பிளஸ் டூ தேர்வில் 600க்கு 599 மதிப்பெண்களைப் பெற்ற பல்லடத்தைச் சேர்ந்த ராகுலுக்கு தங்க மோதிரம் பரிசளித்துள்ளார் விஜய்.
பத்தாம் வகுப்பில் 499 மதிப்பெண்களைப் பெற்ற மடத்துக்குளத்தைச் சேர்ந்த திவ்யலட்சுமிக்கு வைர கம்மலும் பரிசாக வழங்கப்பட்டது.
